/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தம்பியை அடித்து கொன்று விட்டு நாடகமாடிய அண்ணன் கைது
/
தம்பியை அடித்து கொன்று விட்டு நாடகமாடிய அண்ணன் கைது
தம்பியை அடித்து கொன்று விட்டு நாடகமாடிய அண்ணன் கைது
தம்பியை அடித்து கொன்று விட்டு நாடகமாடிய அண்ணன் கைது
ADDED : ஜன 02, 2026 06:02 AM

பெலகாவி: சொத்து பிரச்னையில் தம்பியை கொலை செய்து நாடகமாடிய அண்ணன் கைது செய்யப்பட்டார். மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு கொலை வழக்கை போலீசார் கண்டுபிடித்தனர்.
பெலகாவி மாவட்டம் ஹுக்கேரி தாலுகா, பஸ்சாபுரா கிராமத்தில் வசிப்பவர் சித்தப்பா ராமாபுரே, 42. இவரது தம்பி பசலிங்க ராமாபுரே, 38. அண்ணன், தம்பிக்கு இடையே 4 ஏக்கர் நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. 2025 டிசம்பர் 18ல், பசலிங்க ராமாபுரே, அண்ணனின் வீட்டுக்கு சென்று நிலம் தொட ர்பாக தகராறு செய்தார்.
மாட்டு கொட்டகையில், இருவருக்கும் காரசாரமாக வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது, பசலிங்க ராமாபுரேயை கட்டையாலும், கல்லாலும் சித்தப்பா ராமபுரே தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் இவர்களின் தாய் ரத்னவ்வா, பசவலிங்கா மனைவி வீணா கண் முன்னால் நடந்தது.
'கொலையை பற்றி யாரிடமாவது சொன்னால், உங்களையும் கொலை செய்வேன்' என, சித்தப்பா ராமாபுரே மிரட்டியதால், ரத்னவ்வாவும், வீணாவும் யாரிடமும் கூறவில்லை. தன் தம்பி பசவலிங்க ராமாபுரே, வீட்டின் ஓடுகளை மாற்றும் போது, தவறி கீழே விழுந்து உயிரிழந்தார் என, சித்தப்பா ராமாபுரே நாடகமாடி கிராமத்தினரையும் நம்ப வைத்தார். போலீசாரிடமும் இதையே கூறினார்.
ஹுக்கேரி போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பரிசோதனை அறிக்கையில், தலையில் பலமா ன அடிபட்டதால், இறந்ததாக கூறப்பட்டிருந்தது. சம்பவ இடத்தை போலீசார் பார்வையிட்ட போது, பசவலிங்க ராமபுரே மேலே இருந்து விழுந்ததற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. அதனால், போலீசார் சந்தேகம் அடைந்தனர்.
கிராமத்தி னரிடம் விசாரித்த போது, சகோதரர்கள் இடையே சொத்து தகராறு இருந்ததாக கூறினர். எனவே, இது கொலையாக இருக்கலாம் என, நினைத்த போலீசார், பசவலிங்கா குடும்பத்தினரிடம் தீவிரமாக விசாரித்தனர். அவரது தாயார் ரத்னவ்வாவிடம், போலீசார் உருக்கமாக பேசி விசாரித்த போது இளைய மகனை அடித்து கொலை செய்தது, தன் மூத்த மகன் என்ற உண்மையை கூறினார். வீணாவும் நடந்த சம்பவத்தை விவரித்தார்.
இதையடுத்து சித்தப்பாவை, போலீசார் நேற்று முன் தினம் கைது செய்தனர்.

