ADDED : ஆக 08, 2026 11:57 PM
அ நிறம் | அளவு
ஹாவேரி: ஹாவேரி மாவட்டம், ஹனகல் தாலுகாவில் வசித்தவர் சந்தோஷ் முரேகப்பா, 30. இவரது தம்பி குமார், 27. இருவரும் தனித்தனியாக வசிக்கின்றனர்.
ஒரு ஏக்கர் நிலம் விஷயத்தில், சகோதரர்களுக்குள் சமீப நாட்களாக தகராறு இருந்து வந்தது. அவ்வப்போது கைகலப்பில் ஈடுபட்டனர்.
சொத்து விஷயமாக பேச, நேற்று முன்தினம் சந்தோஷ், ஹனகல்லுக்கு வந்திருந்தார். நேற்று காலை இவர்களுக்குள் வாக்குவாதம் நடந்தது. அப்போது, குமார், தன் அண்ணன் சந்தோஷை கல்லால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இதை கண்ட அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த ஹனகல் போலீசார், குமாரை கைது செய்தனர்.
