/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தங்கையுடன் போட்டோ எடுத்த வாலிபரை தாக்கிய அண்ணன்
/
தங்கையுடன் போட்டோ எடுத்த வாலிபரை தாக்கிய அண்ணன்
ADDED : ஆக 04, 2025 05:22 AM
பல்லாரி: தங்கையுடன் எடுத்த போட்டோக்களை, இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வாலிபரை, பெண்ணின் அண்ணன் கிரிக்கெட் மட்டையால் தாக்கினார்.
பல்லாரி நகரில் வசிப்பவர் தொட்டபசவா, 19. இவர், இதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியுடன், நட்பாக பழகினார். இது சிறுமியின் அண்ணன் சசிகுமாருக்கு பிடிக்கவில்லை.
சில நாட்களுக்கு முன், நிகழ்ச்சி ஒன்றில் சிறுமியும், தொட்டபசவாவும் சந்தித்தனர். இருவரும் சேர்ந்து எடுத்த போட்டோக்களை தொட்டபசவா, இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்தார். இதை பார்த்து சசிகுமார் கோபம் அடைந்தார்.
நேற்று முன் தினம் தன் நண்பர்களுடன் சேர்ந்து, தொட்டபசவாவை பல்லாரி நகரின், ஐ.டி.ஐ., கல்லுாரி மைதானத்துக்கு பைக்கில் அழைத்து சென்றார். அங்கு அவரை கிரிக்கெட் மட்டையால், அனைவரும் கண் மூடித்தனமாக தாக்கினர்.
அப்போது தொட்டபசவா, 'உங்கள் காலில் விழுகிறேன். என்னை விட்டு விடுங்கள்' என கெஞ்சியும் விடாமல் தாக்கினர். இதில் அவரது உதடு, கன்னம், முதுகு, மார்பு, இடுப்பு என, பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
இவ ரை தாக்கிய வீடியோ, சமூக வலைதளங் களில் பரவியுள்ளது. சசிகுமார், சாய் குமார் உட்பட, 10 பேர் மீது கவுல் பஜார் போலீஸ் நிலையத்தில், வழக்கு பதிவாகியு ள்ளது. இவர்கள் அனைவருமே கல்லுாரி மாணவர்கள் என்பது, விசாரணை யில் தெரிந்தது.

