/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தங்கைக்கு திருமண வரவேற்பு விபத்தில் அண்ணன் பலி
/
தங்கைக்கு திருமண வரவேற்பு விபத்தில் அண்ணன் பலி
ADDED : நவ 28, 2025 05:47 AM
ஹாசன்: ஹாசன் மாவட்டம், பேலுார் தாலுகாவின் ஹொன்னேன ஹள்ளி கிராமத் தில் வசித்தவர் லோகேஷ், 25.
இவரது தங்கைக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. நேற்று திருமண வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு தயிரும், மோரும் தேவைப்பட்டது.
இவற்றை வாங்கி வரும்படி பெற்றோர், லோகேஷிடம் கூறினர். அவரும் பைக்கில் புறப்பட்டார்.
லோகேஷுடன், உறவினரான சிக்கமகளூரு மாவட்டத்தின் ராமேனஹள்ளி கிராமத்தை சேர்ந்த கிரணும், 32, சென்றிருந்தார்.
பேலுாரின், முத்தகென்னே கிராமத்தின் அருகில் செல்லும் போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இருவரும் பைக்கில் இருந்து விழுந்தனர்.
இதில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த பேலுார் போலீசார், உடல்களை மீட்டனர். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.

