/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தம்பி இறந்த அதிர்ச்சியில் அண்ணனும் மரணம்
/
தம்பி இறந்த அதிர்ச்சியில் அண்ணனும் மரணம்
ADDED : அக் 04, 2025 11:09 PM
பெலகாவி: தம்பி இறந்ததை கேட்டு, அண்ணன் மாரடைப்பால்உயிரிழந்தார்.
பெலகாவி மாவட்டம், கோகாக் தாலுகாவின், கபரட்டி கிராமத்தில் வசித்தவர் பசவராஜ் பாகன்னவரா, 24. இவர் துணிக்கடையில் பணியாற்றினார். இவரது தம்பி சதீஷ் பாகன்னவரா, 16. இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
சில நாட்களாக சதீஷ் பாகன்னவராவின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது. மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், நேற்று அவர் உயிரிழந்தார். தம்பி இறந்ததை அறிந்த பசவராஜ் பாகன்னவராவுக் கு மாரடைப்பு ஏற்பட்டது.
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பசவராஜ் உயிரிழந்தார். ஒரே நாளில் இரண்டு மகன்களும் இறந்ததால், குடும்பத்தினர் வருத்தம் அடைந்துள்ளனர்.