ADDED : செப் 12, 2026 04:34 AM
மைசூரு: மைத்துனரை கொலை செய்த தங்கை கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மைசூரு டவுன் சாந்திநகரில் வசித்தவர் ஹிதயத்துல்லா ஷெரீப், 30. இவரது தங்கை லுக்னா பானு. இவரின் கணவர் சதாம் உசேன், 30. குடும்ப தகராறில் கணவரை, இரண்டு மாதங்களுக்கு முன் மனைவி பிரிந்தார். பெற்றோர் வீட்டில் வசித்தார்.
நேற்று முன்தினம் மாலை மைத்துனர் வேலை செய்த, இரும்பு கடைக்கு ஹிதயத்துல்லா சென்றார். தங்கையுடன் மீண்டும் குடும்பம் நடத்தும்படி கேட்டார். ஆனால், சதாம் மறுத்து விட்டார்.
இதனால் அங்கு ஏற்பட்ட தகராறில், ஹிதயத்துல்லா தலையில் இரும்பு கம்பியால் சதாம் அடித்தார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தலைமறைவாக இருந்த சதாமை, என்.ஆர்.மொஹல்லா போலீசார் நேற்று கைது செய்தனர். குடும்ப தகராறு, முன்விரோதம் காரணமாக தீர்த் துக்கட்டியது விசாரணையில் தெரிந்தது.
