தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இடி தாக்கி அண்ணன் கண் முன்னே தம்பி பலி

 இடி தாக்கி அண்ணன் கண் முன்னே தம்பி பலி

 இடி தாக்கி அண்ணன் கண் முன்னே தம்பி பலி


ADDED : ஜூன் 06, 2026 04:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 04:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கதக்: இடி தாக்கியதில், அண்ணனின் கண் எதிரே தம்பி உயிரிழந்தார்.

கதக் மாவட்டம், கஜேந்திரகடா தாலுகாவின், ராஜூரு கிராமத்தில் வசித்தவர் பிரசாந்த் ஹுடேதா, 19. இவர் நேற்று மதியம், தன் அண்ணனுடன் மாடு மேய்ப்பதற்காக, ஊருக்கு வெளியே உள்ள நிலத்துக்கு சென்றிருந்தார்.

கதக் மாவட்டத்தில், பரவலாக மழை பெய்கிறது. மாலை ராஜூரு கிராமத்தில் பலத்த இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

அண்ணனும், தம்பியும் 60 அடி இடைவெளியில், மாடு மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது இடி தாக்கியதில், பிரசாந்த் ஹுடேதா உயிரிழந்தார். தன் கண் முன்னே தம்பியை இடி தாக்கியும், அவரை காப்பாற்ற முடியாமல் அண்ணன் பரிதவித்தார். தம்பியின் உடலை தோளில் சுமந்து கொண்டு, ஊருக்குள் கொண்டு வந்தார். சம்பவம் தொடர்பாக, கஜேந்திரகடா போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us