தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 10,000 அரசு பள்ளிகளில் கே.ஜி., வகுப்புகள் துவக்க திட்டம் பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு

 10,000 அரசு பள்ளிகளில் கே.ஜி., வகுப்புகள் துவக்க திட்டம் பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு

 10,000 அரசு பள்ளிகளில் கே.ஜி., வகுப்புகள் துவக்க திட்டம் பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு


ADDED : பிப் 17, 2026 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 05:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: நடப்பாண்டு, 10,000 அரசு பள்ளிகளில், எல்,கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை துவக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களால், பிள்ளைகளை சேர்க்க, பெற்றோர் தயங்குகின்றனர். அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., இல்லாததும் அதற்கு காரணம்.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், ஏழை பெற்றோரின் வசதிக்காகவும், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவக்க அரசு திட்டமிட்டது.

இ தன்படி, 2018 முதல் 2024 வரை, மாநிலத்தின், 2,619 அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவக்கப்பட்டன. இதற்கு பெற்றோரிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. எல்.கே.ஜி., - யு. கே.ஜி., வகுப்பில் சேர்ந்துள்ள சிறார்களுக்கு ஊட்டச்சத்தான உணவு, முட்டை வழங்கப்படுகிறது.

இதன்பின், 2025 - 26ம் ஆண்டு பட்ஜெட்டில், 5,000 தொடக்க பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவக்கப்படும் என, அரசு அறிவித்திருந்தது. அதன்படி 4,056 பள்ளிகளில் எல்.கே.ஜி., வகுப்புகளை துவக்கும்படி அரசு உத்தரவிட்டிருந்தது.

நடப்பாண்டு, 25,000 பள்ளிகளில், இத்திட்டத்தை துவக்கும்படி கர்நாடக தொடக்க பள்ளி ஆசிரியர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால், பட்ஜெட்டில், 10,000 பள்ளிகளுக்கு திட்டத்தை விஸ்தரிப்பதற்கான அறிவிப்பது வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்ப டுகிறது.

கிராமப்புற சிறார்களை, அரசு பள்ளிகளுக்கு ஈர்க்க இத்திட்டம் உதவுகிறது. அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்பில் சேரும் சிறார்கள், அதே பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேருவர். இதனால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும்.பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், அரசு திட்டம் வகுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us