தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மாட்டு வண்டி போட்டியில் கலக்கிய காளைகள்

 மாட்டு வண்டி போட்டியில் கலக்கிய காளைகள்

 மாட்டு வண்டி போட்டியில் கலக்கிய காளைகள்


ADDED : மே 07, 2026 11:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2026 11:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

: சிக்கமகளூரில் நடந்த மாநில அளவிலான, மாட்டு வண்டி போட்டியில் காளை மாடுகள் மின்னல் வேகத்தில் ஓடி, பார்வையாளர்களை கவர்ந்தன.

சிக்கமகளூரு நகரின் கோட்டே கிராமத்தின், கொல்லாபுரதம்மா கோவிலில், ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாவில், மாட்டு வண்டி போட்டி நடப்பது வழக்கம்.

பல மாநிலங்கள் கடந்த சில நாட்களாக, கோவிலில் திருவிழா நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம், மாட்டு வண்டி ஓட்ட பந்தயம் நடந்தது. விமான நிலைய மைதானத்தில் நடந்த போட்டியில் பங்கேற்க மைசூரு, ஹாசன், பெலகாவி, மாண்டியா, சாம்ராஜ்நகர் உட்பட கர்நாடகாவின் பல மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகம், மஹாராஷ்டிரா, ஆந்திராவில் இருந்தும் போட்டியாளர்கள், தங்களின் மாட்டு வண்டிகளுடன் வந்து, பங்கேற்றனர்.

ஏற்கனவே அனைத்து பகுதிகளிலும், நிலத்தை உழும் பணிகள் முடிந்துள்ளன. எனவே விவசாயிகள் பலரும், தங்களின் காளைகளுடன் வந்து போட்டியில் பங்கேற்றனர். காளைகள் காற்றை கிழித்து கொண்டு, மின்னல் வேகத்தில் ஓடியது, பார்ப்போரை ஆச்சரியப்படுத்தியது.

ஓட்ட பந்தயத்தில் முதலிடம் பெற்ற காளைகளுக்கு, இரண்டு லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசாக 1.50 லட்சம் ரூபாய், மூன்றாம் பரிசாக ஒரு லட்சம் ரூபாய், நான்காம் பரிசாக 50,000 ரூபாய் வழங்கப்பட்டது.

போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது:

விவசாயிகளுக்கும், காளைகளுக்கும் பிரிக்க முடியாத பந்தம் உள்ளது. மாட்டு வண்டி போட்டியில் பங்கேற்பது, விவசாயிகளுக்கு பொழுது போக்காக இருப்பதுடன், விளையாட்டிலும் ஆர்வத்தை ஏற்படுத்தும். இளைஞர்கள் கிராமப்புற விளையாட்டுகளில், அதிகமாக பங்கேற்க வேண்டும்.

இரட்டை காளை அன்றாடம் விவசாய பணிகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, இரட்டை காளை மாட்டு வண்டி ஓட்ட பந்தயம், மிகவும் உதவியாக உள்ளது.

மாடுகள் மற்றும் விவசாயிகள் இடையிலான பாசப்பிணைப்பை அதிகரிக்க, இந்த விளையாட்டு உதவும். இதில் பங்கேற்பது நல்ல முன்னேற்றம்.

அதிநவீன காலத்தில், இளைஞர்கள் மொபைல் போன் மட்டும் டி.வி.,க்களில் மூழ்கியுள்ளனர்.

வெளியே சென்று விளையாடுவதில், ஆர்வம் காட்டுவது இல்லை. இளைஞர்கள் மாட்டு வண்டி ஓட்டம், கபடிபோன்ற கிராமிய விளையாட்டுகளில் ஆர்வம் காட்ட வேண்டும்.

இம்முறை மாட்டு வண்டி போட்டி, நல்ல முறையில் நடந்தது.

கர்நாடகா, தமிழகம், ஆந்திரா என, பல்வேறு இடங்களில் இருந்தும், போட்டியாளர்கள் பங்கேற்றனர். போட்டியில் வென்ற முதல் நான்கு குழுக்களுக்கு கோப்பையும், ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us