/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ஷூ'வுக்குள் மறைத்து வைக்கப்படும் சாவியை எடுத்து வீடுகளில் திருட்டு
/
'ஷூ'வுக்குள் மறைத்து வைக்கப்படும் சாவியை எடுத்து வீடுகளில் திருட்டு
'ஷூ'வுக்குள் மறைத்து வைக்கப்படும் சாவியை எடுத்து வீடுகளில் திருட்டு
'ஷூ'வுக்குள் மறைத்து வைக்கப்படும் சாவியை எடுத்து வீடுகளில் திருட்டு
ADDED : ஜூலை 08, 2025 11:56 PM

ஹெப்பகோடி : 'ஷூ'வுக்குள் மறைத்து வைக்கப்படும் சாவியை எடுத்து, வீடுகளில் திருடிய மேற்கு வங்க வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு ஹெப்பகோடி 80 அடி சாலையில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில் சமீபகாலமாக அடிக்கடி திருட்டுகள் நடந்தன. போலீசார் நடத்திய விசாரணையில் வீடுகளின் உரிமையாளர்கள் 'ஷூ'வுக்குள் மறைத்து வைத்துவிட்டு செல்லும் சாவியை எடுத்து, கதவை திறந்து மர்ம நபர்கள் திருடுவது தெரிய வந்தது.
இதனால் அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டு இருந்த, கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். சந்தேகத்தின்பேரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த, மேற்கு வங்க மாநிலத்தின் நிதேஷ் சுப்பு, 27, என்பவரை பிடித்து விசாரித்தனர். வீடுகளில் திருடியதை ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்த போலீசார், 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான 621 கிராம் நகைகளை மீட்டனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில், 'காலிங் பெல்லை' நிதேஷ் சுப்பு அழுத்துவார். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாமல் இருந்தால், அந்த வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்வார். பின், 'ஷூ'வுக்குள் சாவியை வைத்து சென்று உள்ளனரா என்று தேடுவார்.
சாவி கிடைத்ததும் கதவை திறந்து, உள்ளே புகுந்து திருடிவிட்டு, சாவியை மீண்டும் 'ஷூ'வில் வைத்துச் சென்றது, விசாரணையில் தெரியவந்தது.