/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பொது இடங்களில் குப்பை எரித்தால் கிரிமினல் வழக்கு
/
பொது இடங்களில் குப்பை எரித்தால் கிரிமினல் வழக்கு
பொது இடங்களில் குப்பை எரித்தால் கிரிமினல் வழக்கு
பொது இடங்களில் குப்பை எரித்தால் கிரிமினல் வழக்கு
ADDED : நவ 17, 2025 02:34 AM
பெங்களூரு: பெங்களூரில் சாலைகளில் பலரும் குப்பை வீசிவிட்டு செல்வதால், நகரின் பிரதான சாலைகள் கூட குப்பையாகவே காட்சி அளிக்கின்றன.
இதை தடுக்க பொது இடங்களில் குப்பை வீசும் நபர் குறித்து வீடியோ அனுப்பினால் 250 ரூபாய் சன்மானம் என பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் அறிவித்தது.
அதுபோல, சாலை ஓரங்களில் குப்பை எரிக்க கூடாது என விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொண்டது.
இந்நிலையில், காற்று மாசுபடுவதை தடுக்க, பொது இடங்களில் குப்பை எரிப்பதை தடுக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அதாவது, பொது இடங்களில் குப்பை எரிக்கும் நபர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவன தலைவர் கரீகவுடா கூறியதாவது:
குப்பைகளை, தரம் பிரித்தல் மையத்திற்கு அனுப்ப வேண்டும். அங்கு வைத்து எரிக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுவதே முறை.
அதை விட்டு விட்டு, பொது இடங்களில் குப்பை எரித்து, காற்று மாசுபடுத்துவோர் மீது மார்ஷல்கள், சுகாதார ஆய்வாளர்கள் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ய அதிகாரம் அளிக்கப்படுகிறது.
இதற்கு சட்டத்தில் இடமுண்டு. குப்பை எரிப்போர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குவதில் துணை முதல்வர் சிவகுமார் ஒத்துழைப்பு அளித்தார்.
நகரில் கடந்த சில நாட்களில், குப்பை எரித்தவர்கள் மீது 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதன்மூலம், நகரில் குப்பை எரிக்கப்படுவது குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.

