ADDED : மே 09, 2026 11:35 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு: பைக் மீது மோதுவதை தவிர்க்க முற்பட்ட போது, கட்டுப்பாட்டை இழந்த, பி.எம்.டி.சி., அரசு பஸ், கோவிலுக்குள் புகுந்ததால் தடுப்பு சுவர் சேதம் அடைந்தது.
பெங்களூரின் பி.எம்.டி.சி., டிப்போ - 9ஐ சேர்ந்த பஸ், நேற்று மதியம் 1:00 மணிக்கு, பயணியர்களுடன் ஹேரோஹள்ளி கிராசுக்கு சென்று கொண்டிருந்தது. பிருந்தாவன் பஸ் நிலையம் அருகில் செல்லும் போது, பைக் ஒன்று திடீரென குறுக்கே வந்தது.
பைக் மீது மோதுவதை தவிர்க்க, பஸ் ஓட்டுநர் முற்பட்ட போது, கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை ஓரத்தில் இருந்த சிவன் கோவில் மீது மோதியது. இதில் கோவிலின் தடுப்புச்சுவர் மற்றும் கிரில் சேதமடைந்தது.
அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏற்படவில்லை. பயணியருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
