ADDED : மே 09, 2026 11:36 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு: பெங்களூரில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
பெங்களூரு, குடகு, ஷிவமொக்கா ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இந்த மாவட்டங்களுக்கு, 'மஞ்சள் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது.
இதனால், இன்று தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்கவும், தே வையான மின் சாதனங்களை 'சார்ஜ்' செய்து வைத்து கொள்ள வேண்டும் எனவும், கர்நாடக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
பெங்களூரின் எலக்ட்ரானிக் சிட்டி, சில்க் போர்டு போன்ற தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்குவதை தடுக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் ஜி.பி.ஏ., தரப்பில் செய்யப்படுகிறது.
