பஸ் ஓட்டுநர்களும் ‘சீட் பெல்ட்’ அணிவது கட்டாயம்: போலீசார்
பஸ் ஓட்டுநர்களும் ‘சீட் பெல்ட்’ அணிவது கட்டாயம்: போலீசார்
UPDATED : அக் 18, 2026 12:00 AM
ADDED : அக் 17, 2026 07:32 PM
பெங்களூரு: பி.எம்.டி.சி., -– கே.எஸ்.ஆர்.டி.சி., உட்பட, அனைத்து பஸ் ஓட்டுநர்களும் ‘சீட் பெல்ட்’ அணிவது கட்டாயம் என, போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
சாலை பாதுகாப்பு விதிமுறைகளின்படி வர்த்தக வாகனங்கள், பஸ் ஓட்டுநர்கள் கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும். நகரின் சிக்னல்களில் பொருத்தியுள்ள, ஏ.ஐ., கேமராக்கள், சிக்னல்களில் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து போலீசார், சீட் பெல்ட் அணியாத ஓட்டுநர்களை கண்டுபிடித்து, அபராதம் விதிக்கின்றனர்.
தனியார் வாகன ஓட்டுநர்கள் மட்டுமின்றி, பி.எம்.டி.சி., – கே.எஸ்.ஆர்.டி.சி., உட்பட, மற்ற போக்குவரத்து கழகங்களின் பஸ் ஓட்டுநர்களும், சீட் பெல்ட் அணிவது கட்டாயம். இல்லாவிட்டால் அவர்கள் மீதும், நடவடிக்கை எடுக்கப்படும்.
பெங்களூரின், விதான் சவுதா மெட்ரோ ரயில் நிலையம் அருகில், சீட் பெல்ட் அணியாத பி.எம்.டி.சி., பஸ் ஓட்டுநருக்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணிவது இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணியாமல், பஸ் ஓட்ட கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
