பெங்., விமான நிலையத்தில் பிச்சை எடுத்த இருவர் கைது
பெங்., விமான நிலையத்தில் பிச்சை எடுத்த இருவர் கைது
UPDATED : அக் 18, 2026 12:00 AM
ADDED : அக் 17, 2026 07:32 PM
பெங்களூரு: பெங்களூரு ரூரல் மாவட்டம், தேவனஹள்ளி தாலுகாவில் உள்ள, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய வளாகத்தில், ஹைடெக் முறையில் பிச்சை எடுப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
விமான நிலைய நுழைவாசல் அல்லது வளாகத்தில் நின்று கொள்ளும் இவர்கள், பயணியரிடம், தங்களின் பர்ஸ் தொலைந்துவிட்டது என கூறி, உதவி செய்யும்படி வேண்டி பணம் பெறுகின்றனர்.
மேலும், தேர்வுக்கு பணம் கட்ட வேண்டும் என, பொய் சொல்லி பயணியரிடம் பிச்சை எடுக்கின்றனர். மேலும், காவி உடையில், கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து, சன்னியாசி போல நடித்து பணம் கேட்கின்றனர்.
கடந்த சில நாட்களாக, இங்கு சன்னியாசி வேடத்தில் பிச்சை எடுத்த வெங்கட்தினேஷ்குமார், 30, பிரதீக் பாட்டியா, 30, ஆகியோரை விமான நிலைய போலீசார், கைது செய்தனர்.
இதற்கு முன்பும் கூட, இவர்கள் இது போல, பிச்சை எடுத்ததால், போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
