/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பஸ் பயணிக்கு மாரடைப்பு டாக்டர் இல்லாமல் உயிரிழப்பு
/
பஸ் பயணிக்கு மாரடைப்பு டாக்டர் இல்லாமல் உயிரிழப்பு
பஸ் பயணிக்கு மாரடைப்பு டாக்டர் இல்லாமல் உயிரிழப்பு
பஸ் பயணிக்கு மாரடைப்பு டாக்டர் இல்லாமல் உயிரிழப்பு
ADDED : ஜூலை 09, 2025 12:47 AM
நெலமங்களா : கே.எஸ்.ஆர்.டி., பஸ்சில் பயணம் செய்த பயணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால், உடனடி சிகிச்சை கிடைக்காமல் அவர் உயிரிழந்தார்.
ஹாசன் மாவட்டத்தின் தொட்டமன்னிகனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் வெங்கடேஷ், 55. இவரது மனைவி மஞ்சுளா, 50. தம்பதி கட்டட கூலி வேலை செய்கின்றனர். இவர்களின் மகள் திருமணமாகி, பெங்களூரில் வசிக்கிறார். அவ்வப்போது மகளை பார்க்க, பெங்களூருக்கு வந்து செல்வர்.
அதேபோன்று, மகளை பார்க்கும் நோக்கில், ஹாசனில் இருந்து பெங்களூருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் புறப்பட்டனர். நேற்று காலை பெங்களூரு ரூரல் மாவட்டம், நெலமங்களா தாலுகாவின், சோலுார் அருகில் பஸ் சென்றபோது, வெங்கடேஷுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதை கண்ட பஸ் ஓட்டுநர், அவரை உடனடியாக சோலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
ஆனால் அங்கு டாக்டர் இருக்கவில்லை. நர்ஸ் மட்டுமே இருந்தார். அவர் வெங்கடேஷுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, நெலமங்களா மருத்துவமனைக்கு அனுப்பினார். ஆனால் வழியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
“சோலுார் அரசு மருத்துவமனையில், டாக்டர் இருந்திருந்தால், என் கணவர் உயிர் பிழைத்திருப்பார்,” என, மஞ்சுளா வருத்தம் தெரிவித்தார்.