தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தொழில் அதிபரை தாக்கி ரூ.20 லட்சம் கொள்ளை

 தொழில் அதிபரை தாக்கி ரூ.20 லட்சம் கொள்ளை

 தொழில் அதிபரை தாக்கி ரூ.20 லட்சம் கொள்ளை


ADDED : மார் 06, 2026 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 05:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விஜயபுரா: தங்க நாணயங்களை வாங்க வந்த, தொழில் அதிபரை தாக்கி, 20 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திராவின் சித்துாரை சேர்ந்தவர் விஸ்வபிரசாத் ரெட்டி. தொழில் அதிபரான இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவருக்கும், பெங்களூரு ரூரல் தேவனஹள்ளியில் வசிக்கும் குமாருக்கும் ஐந்து மாதங்களுக்கு முன் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழகினர்.

கடந்த மாதம் விஸ்வபிரசாத் ரெட்டியிடம் பேசிய குமார், 'என்னிடம் நான்கு கிலோ தங்க நாணயங்கள் உள்ளன. உங்களுக்கு, 20 லட்சம் ரூபாய்க்கு கொடுக்கிறேன்' என்றார். அதற்கு சம்மதித்த விஸ்வபிரசாத் நேற்று முன்தினம் சித்துாரில் இருந்து காரில், 20 லட்சம் ரூபாயுடன் தேவனஹள்ளிக்கு சென்றார்.

குமாரிடம் மொபைல் போனில் பேசிய போது, தேவனஹள்ளி அருகே விஜயபுரா கிராமத்திற்கு வந்து விடும்படி கூறினார்.

குமார் கூறிய இடத்தில் விஸ்வபிரசாத் காத்திருந்தார். அங்கு பைக்கில் வந்த நான்கு பேர், அவரை கம்பியால் தாக்கி, 20 லட்சம் ரூபாய் மற்றும் மொபைல் போனை கொள்ளையடித்து சென்றனர்.

விஸ்வபிரசாத் அளித்த புகாரில், விஜயபுரா போலீசார் விசாரிக்கின்றனர். இந்த கொள்ளையில் குமாருக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us