/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வாரம் 80 மணி நேரம் வேலை தொழிலதிபருக்கு கண்டனம்
/
வாரம் 80 மணி நேரம் வேலை தொழிலதிபருக்கு கண்டனம்
ADDED : அக் 28, 2025 11:39 PM

பெங்களூரு: 'என் அலுவலகத்தில் வாரத்திற்கு 80 மணி நேரம் வேலை செய்ய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்' என தொழிலதிபர் கூறியது, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
பெங்களூரை சேர்ந்த ரனேபிள் நிறுவனத்தின் சி.இ.ஓ., உமேஷ் குமார். இவர் தன் நிறுவனத்தில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து அடிக்கடி சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
அவ்வகையில், இவர் சமீபத்தில் தன் 'எக்ஸ்' பக்கத்தில், 'பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பெங்களூரில் தங்கி வேலை செய்ய வேண்டும். வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை. வாரம் 60 முதல் 80 மணி நேரம் வேலை செய்ய விருப்பமுள்ள இருபாலரும் விண்ணப்பிக்கலாம்' என குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு, வாரத்தில் 80 மணி நேரம் வேலை என குறிப்பிடப்பட்டது, சமூக வலைதளங்களில் பலத்த சர்ச்சையை கிளப்பியது. பலரும் எதிர்ப்புத் தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
'வாரத்திற்கு அதிகபட்சமாக 48 மணி நேரம் தான் வேலை செய்ய வேண்டுமென, தொழிலாளர் சட்டம் கூறுகிறது. அப்படி இருக்கையில், 80 மணி நேரம் வேலை செய்ய வேண்டுமென கூறுவது சட்டவிரோதமானது' என, பலரும் எதிர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதுபோன்று, 'அதிக நேரம் வேலை செய்யக்கூறும் தொழிலதிபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

