போக்குவரத்து மந்திரியுடன் விவாதிக்க தயார் தொழிலதிபர் மோகன்தாஸ் பை சவால்
போக்குவரத்து மந்திரியுடன் விவாதிக்க தயார் தொழிலதிபர் மோகன்தாஸ் பை சவால்
ADDED : ஜன 31, 2026 05:14 AM

பெங்களூரு: 'பெங்களூரில் நிலவும் பஸ்கள் பற்றாக்குறை குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியுடன் நேரடி விவாதம் செய்யத்தயார்' என தொழிலதிபர் மோகன்தாஸ் பை சவால் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெங்களூரில் கடந்த மூன்று ஆண்டுகளாக பஸ்கள் பற்றாக்குறை நிலவுகிறது. நகரில், 15,000 பஸ்கள் தேவைப்படும் நிலையில், 7,000 பஸ்கள் மட்டுமே உள்ளன. தனியார் பஸ் சேவைக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
'சக்தி' திட்டம் மூலம் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் தான் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இது, இலவசம் கிடையாது.
நம் வரிப்பணத்தில் கொடுக்கும் போது எப்படி இலவசமாகும். போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி நகரில் போக்குவரத்து சேவையை உறுதி செய்வதில், தோல்வி அடைந்து விட்டார். இது குறித்து, அவரிடம் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார். இதற்கு பி.எம்.டி.சி., இயக்குநர் பதில் அளிக்கக்கூடாது. அமைச்சர் மட்டுமே பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
