தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தொழிலதிபர் ராய் தற்கொலை வழக்கு மனைவி, மகனுக்கு எஸ்.ஐ.டி., 'சம்மன்'

 தொழிலதிபர் ராய் தற்கொலை வழக்கு மனைவி, மகனுக்கு எஸ்.ஐ.டி., 'சம்மன்'

 தொழிலதிபர் ராய் தற்கொலை வழக்கு மனைவி, மகனுக்கு எஸ்.ஐ.டி., 'சம்மன்'


ADDED : பிப் 03, 2026 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 06:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ரியல் எஸ்டேட் அதிபர் சி.ஜே.ராய் தற்கொலை வழக்கில், விசாரணைக்கு ஆஜராக அவரது மனைவி, மகனுக்கு, எஸ்.ஐ.டி., சம்மன் அனுப்பி உள்ளது. 'ராய் தற்கொலை குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார்.

கேரளாவை சேர்ந்தவர் சி.ஜே.ராய், 57; பிரபல ரியல் எஸ்டேட் அதிபர். பெங்களூரு அசோக்நகரில் வசித்த இவர், கடந்த 30ம் தேதி தன் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கொண்டிருந்த போதே, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கை விசாரிக்க எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவை, கர்நாடகா அரசு அமைத்து உள்ளது.இணை கமிஷனர் வம்சி கிருஷ்ணா தலைமையில் விசாரணை நடக்கிறது.

இந்நிலையில், ராயின் அலுவலகத்தில் இருந்து 9 பக்க கடிதம், சிறிய டைரியை எஸ்.ஐ.டி., கைப்பற்றியதாகவும், அதில் உள்ள தகவல்களை வைத்து விசாரணையை துரிதப்படுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

டைரியில் உள்ள கையெழுத்து ராய் உடையதா என்பதை உறுதி செய்ய, விசாரணைக்கு ஆஜராகும்படி ராயின் மனைவி, மகனுக்கு எஸ்.ஐ.டி., சம்மன் அனுப்பி உள்ளது.

கேரள முதல்வர் கடிதம் இந்நிலையில் ராய் தற்கொலை விவகாரத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் எழுதிய கடிதம்:

பெங்களூரில் உள்ள கான்பிடன்ட் குழும அலுவலகத்தில், வருமான வரி அதிகாரிகள் கடந்த 30ம் தேதி சோதனை நடத்திய போது, அந்த குழுமத்தின் தலைவர் சி.ஜே.ராய் இயற்கைக்கு மாறான முறையில் இறந்தார்.

கேரளாவை சேர்ந்த அவரது மரணம், கேரள மக்களை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மரணத்தை கேள்விப்பட்டு தொழில் அதிபர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த துரதிர்ஷ்ட சம்பவம் நாட்டின் வரி நிர்வாகத்தில் ஒரு கரும்புள்ளி.

வருமான வரி சோதனை நடக்கும் போது, ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு இடத்தில் சோதனை நடக்கும் போது, அந்த இடம் முழுதையும் வருமான வரித்துறை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.

ஊடக அறிக்கைபடி, சோதனை நடந்த போதே, ராய் தற்கொலை செய்து கொண்டது உண்மையாக இருந்தால், அது கடுமையான தவறு. இறந்த ராய், தன் சகோதரரிடம், வருமான வரித்துறை அதிகாரிகள் துன்புறுத்தல் பற்றி பேசி உள்ளார். இந்த சம்பவம் குறித்து முழுமையான உண்மை வெளிவர வேண்டும்.

எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் நடக்க, பாரபட்சமற்ற விசாரணை நடத்துவது அவசியம். நீதி விசாரணைக்கு உத்தரவிடுவது தான் சரியாக இருக்கும். எந்த தாமதமும் இன்றி நீதி விசாரணைக்கு உத்தரவிடுவதுடன், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அறிக்கையை பெறுவதிலும் மத்திய அரசு தயக்கம் காட்ட கூடாது.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

கொலையா என சந்தேகம்

சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் கூறுகையில், ''ரியல் எஸ்டேட் அதிபர் ராய் தற்கொலையில் சந்தேகம் உள்ளது. அவரே சுட்டு கொண்டாரா அல்லது யாராவது சுட்டனரா என்று தெரிய வேண்டும். அவர் தற்கொலை செய்ததை யாராவது நேரில் பார்த்தார்களா; வருமான வரி அதிகாரிகளுக்கு தலையில் கொம்பா உள்ளது. சட்டம் அனைவருக்கும் சமம்,'' என்றார்.

ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஏ.மஞ்சு கூறுகையில், ''ராய் தற்கொலை செய்ததில் எனக்கும் சந்தேகம் உள்ளது. இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் அழுத்தம் இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. விசாரணையில் அனைத்தும் தெரிய வேண்டும்,'' என்றார்.

வழக்கை திரும்ப பெற்ற ராய்

பெங்களூரில் உள்ள தனது நிறுவனங்கள் மீது, கேரள வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்துவது சட்டவிரோதமானது என்றும், சோதனையை நிறுத்த உத்தரவிட கோரியும், கடந்த டிசம்பர் 16ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ஒரு வழக்கை ராய் தாக்கல் செய்திருந்தார். ஆனால் டிசம்பர் 18ல் தனது வழக்கை அவர் வாபஸ் பெற்றது தற்போது தெரியவந்து உள்ளது. மனுவை திரும்ப பெறும்படி, வருமான வரி அதிகாரிகள் தொல்லை கொடுத்து இருக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us