/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
40 சிறுபான்மையினர் காலனி மேம்படுத்த ரூ.398 கோடி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல்
/
40 சிறுபான்மையினர் காலனி மேம்படுத்த ரூ.398 கோடி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல்
40 சிறுபான்மையினர் காலனி மேம்படுத்த ரூ.398 கோடி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல்
40 சிறுபான்மையினர் காலனி மேம்படுத்த ரூ.398 கோடி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல்
ADDED : செப் 11, 2025 11:35 PM

பெங்களூரு: ''மாநிலத்தின் 22 சட்டசபை தொகுதிகளில், 40 சிறுபான்மையினர் காலனியை மேம்படுத்துவதற்காக, 398 கோடி ரூபாய், நிதி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது,'' என, மாநில சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.
பெங்களூரு, விதான் சவுதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பின், சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் அளித்த பேட்டி:
n மாநிலத்தின் 22 சட்டசபை தொகுதிகளில், 40 சிறுபான்மையினர் காலனியை மேம்படுத்துவதற்காக, 398 கோடி ரூபாய், நிதி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
n உத்தர கன்னடா மாவட்டம், எல்லாபூரில் 35 கோடி ரூபாய் செலவில், ஹெக்காரா கிராமம் - குல்லாபுரா கிராமம் இடையே கங்காவளி ஆற்றை கடக்கும் வகையில் பாலம் கட்ட ஒப்புதல்
n விஜயபுராவில் 618.75 கோடி ரூபாயில் விமான நிலையம் கட்டப்பட்டு வருவது தொடர்பாக, மாநில தலைமை செயலர் தலைமையில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
n பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில், 20.05 கோடி ரூபாய் செலவில், 1,000 படுக்கைகள் வாங்க, ஒப்புதல்
n மாலுார், மாகடி, குஷால் நகர், கொரட்டகெரே, ஜகலுார், சாவனுார், ராம்துர்க், சவதத்தி, தாவணகெரே, மங்களூரின் வென்லாக் மாவட்ட மருத்துவமனைகள் மறுசீரமைக்க 542 கோடி ரூபாய்க்கு ஒப்புதல்
n நடமாடும் சுகாதார மையத்தை சரி செய்யவும்; புதிய மருத்துவ உபகரணங்கள் வாங்கவும் 12.25 கோடி ரூபாய்க்கு ஒப்புதல்; இந்த வாகனத்தை பழுது செய்ய, ஆண்டுதோறும் பராமரிப்புக்கு, 14.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல்
n பிரதம மந்திரி குசும் - பி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு பம்ப் செட்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்க ஒப்புதல்
n அரசு நிகழ்ச்சிகளில் குறைந்தபட்சம் ஒன்பது; அதிகபட்சமாக 15 விருந்தினர்களை அழைப்பதற்கான வழிகாட்டுதல்கள் மாற்றப்பட்டு உள்ளன. நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தின் அடிப்படையில், மாவட்ட பொறுப்பு அமைச்சர், கூடுதல் விருந்தினர்களை அழைக்க, அங்கீகாரம் அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
n மறைந்த நடிகர் விஷ்ணுவர்த்தன், நடிகை சரோஜா தேவிக்கு 'கர்நாடக ரத்னா' விருது வழங்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.