தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 102 தாலுகாக்களின் வறட்சி நிலவரம் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

 102 தாலுகாக்களின் வறட்சி நிலவரம் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

 102 தாலுகாக்களின் வறட்சி நிலவரம் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு


ADDED : ஆக 26, 2026 11:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 11:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''மாநிலத்தில் நிலவும் வறட்சி நிலவரம் குறித்து விரிவான ஆய்வு நடந்து வருகிறது. 102 தாலுகாக்களின் கள ஆய்வு அறிக்கை பெறப்பட்டு உள்ளன. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து வறட்சியை அறிவிப்போம்,'' என, துணை முதல்வர் பரமேஸ்வர் தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

மத்திய அரசின் விதிமுறைகளின்படி, நாங்கள் வறட்சியை அறிவிப்போம். ஒவ்வொரு வாரமும், வறட்சி குறித்த ஆய்வு மேற்கொள்வோம்.

மாநிலத்தில் நிலவும் வறட்சி நிலவரம் குறித்து விரிவான ஆய்வு நடந்து வருகிறது. 102 தாலுகாக்களின் கள ஆய்வு அறிக்கை பெறப்பட்டு உள்ளன. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து வறட்சியை அறிவிப்போம்.

வறட்சி நிலவரத்தை ஆய்வு செய்ய பா.ஜ.,வும் குழு அமைத்திருந்தது. ஆனால், அது பற்றி சட்டசபையில் எந்த விவாதமும் நடக்கவில்லை. முதல்வருக்கோ, வருவாய் துறை அமைச்சரான எனக்கோ அறிக்கையோ, கடிதமோ வழங்கவில்லை.

மாநிலத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. விவசாயிகளும், பயிர் இழப்புகளை சந்தித்துள்ளனர். எதிர்க்கட்சிகள் இது குறித்து விவாதித்து ஆலோசனை வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு பதிலாக, சட்டசபையில் அரசியல் மட்டுமே செய்துள்ளனர்.

சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபோது, என்னை முதல்வராக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்திடம் கூறினார். ஆனால் மேலிடம் அதை கருத்தில் கொள்ளவில்லை. எனவே, என்னை துணை முதல்வராக்க வேண்டும் என்று அவர் கூறியது உண்மை தான்.

பெங்களூரு நகரில் உள்ள பூங்காக்களின் நிலத்தின், 5 சதவீத நிலம், பொது நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும். மாநகராட்சி அதை திட்டவட்டமாக அறிவிக்கும்போது அது தெரியவரும்.

நான் பெங்களூரு பொறுப்பு அமைச்சராக இருந்த போது, சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது குறித்து விவாதித்தோம். மக்கள் நடப்பதற்காக சாலைகள் உள்ளன. இருபுறமும் வாகனங்களை நிறுத்தினால், எப்படி நடப்பது. இது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us