அமைச்சரவை துளிகள்
l நந்தி மலையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது இதுவே முதன்முறை
l அமைச்சரவை கூட்டத்தை ஒட்டி, நந்திமலைக்கு சுற்றுலா பயணியர் வர தடை விதிக்கப்பட்டிருந்தது
l நந்தி மலைக்குள் நுழையும் பகுதியில் இருந்து, அமைச்சரவை கூட்டம் நடந்த இடம் வரை, தலைவர்களை வரவேற்று காங்கிரஸ் தொண்டர்கள் பேனர்கள் வைத்திருந்தனர்
l அமைச்சரவை கூட்டத்திற்கு வந்தாலும், நந்திமலையை ஆர்வமுடன் சுற்றி பார்த்து பல கோணங்களில் புகைப்படம் எடுத்து அமைச்சர்கள் மகிழ்ந்தனர்
l தன் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், அமைச்சரவை கூட்டம் நடந்ததால் முதன்முறை எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் மகிழ்ச்சியில் திளைத்தார். முதல்வருக்கு வெள்ளி கேடயம் வழங்கி கவுரவித்தார்
l சில அமைச்சர்கள் பட்டு அங்கவஸ்திரம் அணிந்திருந்தனர்
l குடிநீர் திட்டங்கள் பற்றி முதல்வர் பேசும்போது, பெங்களூரு ரூரல் மாவட்டத்தின் பெயரை சேர்த்து கூறினார். இதை கவனிக்காத அமைச்சர் முனியப்பா, பெங்களூரு ரூரல் மாவட்ட பெயரை விட்டுவிட்டதாக கூறினார். 'நான் கூறினேன், நீங்கள் தான் கவனிக்கவில்லை' என்று கூறிய முதல்வர், “முனியப்பாவுக்கு 24 மணி நேரமும் அரசியல் சிந்தனை தான்,” என, நக்கலாக கூறினார்.
l துணை முதல்வர் சிவகுமார் இறுக்கமாக காணப்பட்டார். அவ்வப்போது முதல்வர் அடித்த 'கடி' ஜோக்குகளுக்கு மட்டும், சிவகுமார் உதட்டில் இருந்து புன்னகை வந்தது.