தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அமைச்சரவை விரிவாக்கம் கட்டாயம் காங்.,-எம்.எல்.ஏ., ரிஸ்வான் வலியுறுத்தல்

 அமைச்சரவை விரிவாக்கம் கட்டாயம் காங்.,-எம்.எல்.ஏ., ரிஸ்வான் வலியுறுத்தல்

 அமைச்சரவை விரிவாக்கம் கட்டாயம் காங்.,-எம்.எல்.ஏ., ரிஸ்வான் வலியுறுத்தல்


ADDED : பிப் 10, 2026 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 04:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் கண்டிப்பாக நடக்க வேண்டும்,'' என சிவாஜிநகர் தொகுதி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் விருப்பம் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து, நேற்று அவர் அளித்த பேட்டி:

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் கண்டிப்பாக நடக்க வேண்டும். புதியவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. முதல்வர் மாற்றம் குறித்து பேசி சர்ச்சை ஏற்படுத்த விரும்பவில்லை. சிறுபான்மையினர் என நீங்கள் அழைப்பவர்களும் இந்தியர்களே. இதுபோன்ற கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுவது சரியில்லை.

'பாரத ரத்னா' விருது வழங்கப்படுவதற்கு சாவர்க்கர் தகுதியானவரா என்பதை பார்க்க வேண்டும். ஆங்கிலேயர்களுடன் கைகோர்த்து, அவர்கள் அளித்த பணத்தில் வாழ்க்கை நடத்தியவருக்கு விருது வேண்டுமா என சிந்தித்து பாருங்கள்.

மத்தியில் பா.ஜ., அரசு உள்ளது. எனவே, அவர்கள் விரும்பியவர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்படலாம். சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டால்; மற்ற சுதந்திர போராட்ட தியாகிகளை அவமானப்படுத்துவதற்கு சமம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us