/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நந்தி மலையில் அமைச்சரவை கூட்டம் ரத்து கோலார், சிக்கபல்லாபூரில் கடும் அதிருப்தி
/
நந்தி மலையில் அமைச்சரவை கூட்டம் ரத்து கோலார், சிக்கபல்லாபூரில் கடும் அதிருப்தி
நந்தி மலையில் அமைச்சரவை கூட்டம் ரத்து கோலார், சிக்கபல்லாபூரில் கடும் அதிருப்தி
நந்தி மலையில் அமைச்சரவை கூட்டம் ரத்து கோலார், சிக்கபல்லாபூரில் கடும் அதிருப்தி
ADDED : ஜூன் 19, 2025 11:32 PM
கர்நாடகாவில் சிக்கபல்லாபூரில் 'நந்தி மலை' பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக உள்ளது. இங்கு காந்தி முதல் பிரதமர்கள், வி.வி.ஐ.பி.,க்கள் பலர் வந்து சென்றுள்ளனர்.
ஒருங்கிணைந்த கோலார் மாவட்டம், 2007 ஆகஸ்ட் 23ல் பிரிக்கப்பட்டு சிக்கபல்லாபூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
இதில், சிந்தாமணி, பாகேபள்ளி, சித்லகட்டா, சிக்கபல்லாபூர், கவுரி பிதனுார், மஞ்சேனஹள்ளி, குடிபண்டே, சேளூர் என எட்டு தாலுகாக்கள் இடம் பெற்றுள்ளன.
எதிர்பார்ப்பு
சிக்கபல்லாபூரின் முக்கிய இடங்களில் ஒன்று தான் நந்தி மலை. இங்கு நேற்று கர்நாடக அமைச்சரவை கூட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கோலார், சிக்கபல்லாபூர் மாவட்டங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இக்கூட்டம் நடத்தப்படுவது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
அனைத்து அமைச்சர்கள், அமைச்சக்க செயலர்கள், அரசு அதிகாரிகள், இரு மாவட்டங்களின் எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் என பலரும் தங்கி ஓய்வெடுக்கவும், தரமான உணவு வகைகள் கிடைக்கவும் தடபுடலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதற்காக, இரவு, பகல் பாராமல் அமைச்சர் சுதாகர் தலைமையில் இரு மாவட்ட அதிகாரிகள் கூட்டம், போலீஸ் பாதுகாப்பு ஆலோசனைகள், சுற்றுலா பயணியருக்கு தடை, பந்தல், சாமியானாக்கள் அமைத்தல் என அமர்க்களப்படுத்தி இருந்தனர்.
கடந்த ஒரு மாதமாகவே, இரு மாவட்டங்களின் அதிகாரிகள் வேறெந்த வேலையையும் செய்யாமல் அமைச்சரவை கூட்டம் குறித்தே பணிகளை மேற்கொண்டு வந்தனர். இதற்காக 10 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
அமைச்சரவை கூட்டத்தில் கோலார்,- சிக்கபல்லாப்பூர் மாவட்டங்களின் மேம்பாட்டுக்கு பல நுாறு கோடி ரூபாய் திட்டம் அறிவிக்கப்படும் என்றும், அரசு மருத்துவ கல்லுாரி, தொழிற்பேட்டை, தொழில் நகரத்துக்கு நிதி ஒதுக்கீடு, ரயில் பெட்டி தொழிற்சாலை என பல திட்டங்களுக்கு வழிபிறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இரு மாவட்டங்களின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்க அதிகாரிகள் ஆர்வம் செலுத்தியதாக தெரியவில்லை. அறிக்கையும் தயார் செய்யவில்லை.
வெட்டவெளிச்சம்
காங்கிரஸ் அரசின் ஐந்து வாக்குறுதி திட்டங்களுக்காகவே, அரசு கஜானா காலியாவதால், புதிய திட்டங்களுக்காக எத்தனை கோடியை, எங்கிருந்து திரட்டுவது என சிந்தித்து வந்தனர்.
இதனால், நந்தி மலை கூட்டத்தை ரத்து செய்து, விதான் சவுதாவுக்குள்ளேயே அமைச்சரவை கூட்டத்தை நடத்த தீர்மானித்தது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
இதனால் அமைச்சர் சுதாகர் உட்பட இரு மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். கோலார் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 4 காங்கிரசின் எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் கூட்டம் நடத்தாமல், ரத்து செய்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
- நமது நிருபர் -