/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
24ல் சாம்ராஜ் நகரில் அமைச்சரவை கூட்டம்
/
24ல் சாம்ராஜ் நகரில் அமைச்சரவை கூட்டம்
ADDED : ஏப் 19, 2025 05:32 AM
சாம்ராஜ் நகர்: பிரசித்தி பெற்ற மலை மஹாதேஸ்வரா மலையில், வரும் 24ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடக்கவுள்ளது. மாநில மேம்பாடு தொடர்பான திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கை குறித்தும் விவாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவில் மலை மஹாதேஸ்வரா மலையில், அமைச்சரவை கூட்டம் நடத்த மாநில அரசு பல நாட்களாக முயற்சிக்கிறது.
தவிர்க்க முடியாத காரணத்தால் தள்ளிவைக்கப்பட்டது. மூன்று முறை தள்ளிவைக்கப்பட்ட அமைச்சரவை கூட்டம், இம்மாதம் 24ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மலை மஹாதேஸ்வரா மலையில், அமைச்சரவை கூட்டம் நடப்பது, கர்நாடக வரலாற்றில் முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தை, வெற்றிகரமாக்க மாவட்ட கலெக்டர் ஷில்பா நாக் இப்போதிருந்தே தயாராகி வருகிறார். 24ம் தேதி, மதியம் 12:00 மணிக்கு அமைச்சரவை கூடுகிறது.
சாம்ராஜ் நகர், மாண்டியா, குடகு, சிக்கமகளூரு, உடுப்பி, மங்களூரு, ஹாசன் மாவட்டங்களின் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும்.
சாம்ராஜ் நகர் மாவட்ட சுற்றுலா, தொழிற் முன்னேற்றம், ஏரி நிரப்பும் திட்டம், சாலை என, பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படும் வாய்ப்புள்ளது. மாநிலத்தில் சூறாவளியை கிளப்பிய ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கை குறித்தும் ஆலோசிக்கப்படலாம்.
அமைச்சரவை கூட்டம் நடக்கும் இடத்தை, மாவட்ட கலெக்டர் ஷில்பா நாக், ஹனுார் எம்.எல்.ஏ., மஞ்சுநாத் ஆகியோர், நேற்று பார்வையிட்டனர்.
மஞ்சுநாத் ம.ஜ.த.வை சேர்ந்தவர் என்றாலும், கட்சி வேறுபாட்டை மறந்து அமைச்சரவை கூட்டத்தை வெற்றிகரமாக்குவதில் ஆர்வம் காட்டுகிறார்.