ADDED : மே 30, 2025 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: முதல்வர் சித்தராமையா தலைமையில், ஜூன் 5ம் தேதியன்று கர்நாடக அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. அப்போது முக்கியமான விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
முதல்வர் சித்தராமையா தலைமையில் அவரது அமைச்சரவை கூட்டம், பெங்களூரின் விதான்சவுதாவின் மாநாடு ஹாலில் ஜூன் 5ம் தேதியன்று, காலை 11:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், மாநில வளர்ச்சி திட்டங்கள், மழைச்சேதம், கொரோனா பரவல் உட்பட, முக்கியமான விஷயங்கள் குறித்து ஆலோசனை நடக்கும்.
மின் இணைப்பு பெற நில உரிமச்சான்று கட்டாய விதிமுறையை நீக்குவது குறித்து, அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிப்பதாக, மின்துறை அமைச்சர் ஜார்ஜ் கூறியிருந்தார். இது பற்றியும் அன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என, அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.