தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அரசு பஸ் டிக்கெட் கட்டண உயர்வு அமைச்சரவையில் விரைவில் முடிவு

 அரசு பஸ் டிக்கெட் கட்டண உயர்வு அமைச்சரவையில் விரைவில் முடிவு

 அரசு பஸ் டிக்கெட் கட்டண உயர்வு அமைச்சரவையில் விரைவில் முடிவு


ADDED : ஜூலை 01, 2026 11:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 11:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''அரசு பஸ்களில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது குறித்து, அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷ் கூறி உள்ளார்.

அவர் அளித்த பேட்டி:

சக்தி திட்டம் மூலம் மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான பெண்கள், அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கின்றனர். இது, ஒரு தனித்துவமான திட்டமாகும். இத்திட்டத்தால் மாநிலத்தில் உள்ள நான்கு போக்குவரத்து கழகங்களும், மாதம், 40 கோடி ரூபாய்க்கும் மேல் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.

டீசல் விலை உயர்வு, டிரைவர், நடத்துநர்களுக்கு சம்பளம் வழங்குவது, பஸ் பராமரிப்பு உள்ளிட்டவற்றை சமாளிக்க முடியாமல் போக்குவரத்து கழகங்கள் திணறுகின்றன.

எனவே, அரசு பஸ்களில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். இவ்விஷயத்தில் முதல்வர் சிவகுமாரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.

பயணியருக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படும். போக்குவரத்து கழகங்கள் நிலையாக நின்று செயல்பட வேண்டும்.

இதற்கு டிக்கெட் கட்டண உயர்வு முக்கியமாகும். கடைசியாக 2023ம் ஆண்டு ஜூன் மாதம் பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது. இருப்பினும், தற்போது மீண்டும் ஒரு முறை உயர்த்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us