sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'டிப்ஸ்' பணத்துக்காக கபே ஊழியர்கள் நடனம்

 'டிப்ஸ்' பணத்துக்காக கபே ஊழியர்கள் நடனம்

 'டிப்ஸ்' பணத்துக்காக கபே ஊழியர்கள் நடனம்


ADDED : பிப் 07, 2026 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 06:26 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: வாடிக்கையாளர்களிடம், 'டிப்ஸ்' பெற, பெங்களூரு ஹோட்டல் ஒன்றில், ஊழியர்கள் புது வழிமுறையை கையாண்டு வருகின்றனர். அதாவது, டிப்ஸ் கொடுக்கும் வாடிக்கையாளர்கள், ஊழியர்களின் நடனத்தை கண்டு ரசிக்கலாம்.

பொதுவாக ஹோட்டல்களில், வாடிக்கையாளர்கள் உணவருந்திய பின், பில் தொகையுடன் சர்வர்களுக்கு டிப்ஸ் கொடுப்பது வழக்கம். இது, அவர்களுக்கு உபரி வருவாயாக இருக்கும். இதற்காகவே வாடிக்கையாளர்களை நல்ல முறையில் பலர் கவனிப்பர்.

பெங்களூரின் ஹென்னுார் பிரதான சாலையில், கபே ஒன்று உள்ளது. இங்குள்ள ஊழியர்கள், டிப்ஸ் கொடுக்கும் வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், புது வழியை கையாள்கின்றனர். அதாவது, வாடிக்கையாளர்கள் உணவருந்திய பின் டிப்ஸ் கொடுத்தால், அவர்களின் முன்னால் ஊழியர்கள் நடனமாடுகின்றனர். இது, வாடிக்கையாளர்களை மகிழ்விக்கிறது.

அந்த, 'கபே'யின் கேஷ் கவுன்டர் அருகே சிறிய போர்டு வைக்கப்பட்டுள்ளது. அதில், 'நீங்கள் டிப்ஸ் கொடுத்தால், உங்களுக்காக ஊழியர்கள் நடனமாடுவர்' என, எழுதப்பட்டுள்ளது.

இதை கண்ட பலரும், டிப்ஸ் கொடுத்து ஊழியர்களின் நடனத்தை கண்டு ரசித்து செல்கின்றனர். ஊழியர்கள் நடனமாகும் வீடியோவை, வாடிக்கையாளர்கள் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us