தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கனரா வங்கி மாரத்தான் போட்டி: 11,286 பேர் பங்கேற்று சாதனை

கனரா வங்கி மாரத்தான் போட்டி: 11,286 பேர் பங்கேற்று சாதனை

கனரா வங்கி மாரத்தான் போட்டி: 11,286 பேர் பங்கேற்று சாதனை


UPDATED : நவ 23, 2026 12:00 AM

ADDED : நவ 22, 2026 09:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 12:00 AM ADDED : நவ 22, 2026 09:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் நேற்று நடந்த 4வது கனரா வங்கி மாரத்தான் போட்டியில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 11,286 பேர் பங்கேற்று சாதனை படைத்தனர்.

பெங்களூரு கன்டீரவா மைதானத்தில், 4வது கனரா வங்கி மாரத்தான் போட்டி, ‘ஒன்றாக இணைவோம், ஒன்றாக ஓடுவோம்’ என்ற கருப்பொருளில் நேற்று நடந்தது. நகரின் பல பகுதிகளில் வசிக்கும் ஓட்டப்பந்தய வீரர்கள், சிறுவர்கள், முதியவர்கள், இல்லத்தரசிகள் என பல தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

மூன்று வகை



உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி, 3, 5, 10, கி.மீ., என மூன்று வகை போட்டிகள் நடந்தன. ஒரு போட்டியில் பங்கேற்றவர், மற்ற போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

கனரா வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான பிரஜேஷ்குமார் சிங் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் காலை 6:00 மணிக்கு 10 கி.மீ.,க்கான மாரத்தான் போட்டியை துவக்கினர். 5 கி.மீ., போட்டியில், வங்கியின் மூத்த நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

தடகள வீராங்கனை பூவம்மா



அம்பேத்கர் வீதி, கப்பன் சாலை, ராஜ்பவன் சாலை, எம்.ஜி., சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலையிலேயே ஆயிரக்கணக்கானோர் தலையில் தொப்பியுடன், ஒரே நிறத்திலான, டி – ஷர்ட் அணிந்து ஓடியது பார்ப்பதற்கு அழகாக இருந்தது. இதற்காக, போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டது.

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற தடகள வீராங்கனை பூவம்மா போட்டியில் பங்கேற்றவர்களை உற்சாகப்படுத்தினார். இப்போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான பிரஜேஷ்குமார் சிங் கூறியதாவது:

மாரத்தான் போட்டியில் 11,286 பேர் பங்கேற்றதால், சர்வதேச மாரத்தான் மற்றும் தொலைதுார ஓட்டப்பந்தய வீரர்கள் சங்கம் சான்றிதழ் வழங்கி உள்ளது. இதனால் கனரா வங்கி மாரத்தானுக்கு மேலும் பெருமை கிடைத்து உள்ளது.

ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே வங்கியின் நோக்கம். இது, வங்கி சேவைகளுக்கு அப்பாற்பட்டது. இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்த நிகழ்வை வெற்றிகரமாக நிகழ்த்தி காண்பித்த தன்னார்வலர்களுக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

10 கி.மீ., போட்டியில் வென்றவர்களுக்கு முதல் பரிசு 2 லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசு 1 லட்சம் ரூபாய், மூன்றாம் பரிசு 50 ஆயிரம் ரூபாய்; 5 கி.மீ., மாரத்தான் போட்டியில் வென்றவர்களுக்கு முதல் பரிசு 1 லட்சம் ரூபாய், 2வது பரிசு 50 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசு 25 ஆயிரம் ரூபாய் என ஆண், பெண் இருவருக்கும் தனித்தனியே பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us