தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ லாரியின் பின்பக்கம் மோதிய கார்; 3 எஸ்.ஐ.,க்கள் பரிதாப பலி

 லாரியின் பின்பக்கம் மோதிய கார்; 3 எஸ்.ஐ.,க்கள் பரிதாப பலி

 லாரியின் பின்பக்கம் மோதிய கார்; 3 எஸ்.ஐ.,க்கள் பரிதாப பலி


ADDED : மார் 16, 2026 07:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 07:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சித்ரதுர்கா: சித்ரதுர்கா அருகே, லாரியின் பின்பக்கம் கார் மோதிய விபத்தில், ஆயுதப்படை எஸ்.ஐ.,க்கள் மூன்று பேர் உடல்நசுங்கி இறந்தனர். மேலும் இருவர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

சித்ரதுர்காவின் ஹிரியூர் தாலுகா ஹெக்கரே கிராமம் வழியாக செல்லும், பெங்களூரு - பல்லாரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை, 7:30 மணிக்கு ஒரு மாருதி ஸ்விப்ட் கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தறிகெட்டு ஓடி முன்னால் சென்ற லாரியின் பின்பக்கம் சொருகியது.

டமார் என்று சத்தம் கேட்டதால், லாரியை டிரைவர் நிறுத்தினார். கீழே இறங்கி வந்து பார்த்த போது, லாரிக்குள், கார் சொருகியது தெரிந்தது. ஐமங்களா போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அங்கு வந்த போலீசார், கிராம மக்கள் உதவியுடன் காருக்குள் இருந்தவர்களை மீட்க முயன்றனர். இடிபாடுகளில் சிக்கி மூன்று பேர் உடல்நசுங்கி இறந்தது தெரிந்தது.

படுகாயத்துடன் உயிருக்கு போராடிய இருவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சித்ரதுர்கா எஸ்.பி., ரஞ்சித்குமார் பண்டாரு சம்பவ இடத்திற்கு வந்தார்.

முதற்கட்ட விசாரணையில், விபத்தில் இறந்தவர்கள் சச்சின், 32, அமரேஷ், 26, மஞ்சுநாத், 31 என்பதும், படுகாயம் அடைந்தவர்கள் ஈஸ்வர், 32, மஹாந்தேஷ், 31 என்பதும் தெரியவந்தது.

இவர்கள் 5 பேரும் பெங்களூரில் ஆயுதப்படையில் எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர்கள். நண்பர் ஒருவரின் திருமணத்தில் பங்கேற்க, பல்லாரி சென்ற போது விபத்தில் சிக்கியது தெரிந்தது.

விபத்து நடந்த இடத்தை உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், சித்ரதுர்கா மாவட்ட பொறுப்பு அமைச்சரும், புள்ளியியல் துறை அமைச்சருமான டி.சுதாகர், செல்லகெரே காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரகுமூர்த்தி பார்வையிட்டனர். எஸ்.பி.,யிடம் இருந்து தகவல் சேகரித்தனர்.

பரமேஸ்வர் கூறுகையில், ''விபத்தில் இளம் எஸ்.ஐ.,க்கள் 3 பேரை இழந்தது வருத்தம் அளிக்கிறது. இவர்கள் சமீபத்தில் தான் பயிற்சியை நிறைவு செய்து பணியில் சேர்ந்தனர். படுகாயம் அடைந்த இரு எஸ்.ஐ.,க்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கும்படி, டாக்டர்களுக்கு உத்தரவிட்டுஉள்ளேன்.

''முதற்கட்ட விசாரணையில் கார் வேகமாக வந்தது தெரிந்து உள்ளது. விசாரணை நடக்கிறது. உயிரிழந்த எஸ்.ஐ.,க்கள் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அரசு செய்யும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us