ADDED : ஆக 28, 2026 02:19 AM
அ நிறம் | அளவு
தட்சிண கன்னடா: தட்சிண கன்னடா மாவட்டம், புத்துார் தாலுகாவின், மாட்னாரு என்ற இடத்தில், கடந்த ஜூன் 20ம் தேதியன்று, 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆம்னி கார் திருடு போனது. இது குறித்து, புத்துார் போலீஸ் நிலையத்தில், உரிமையாளர் புகார் அளித்திருந்தார்.
எஸ்.ஐ.,க்களான குணபாலா மற்றும் சுஷ்மா பண்டாரி தலைமையிலான குழுவினர், கேரளா, தமிழக மாநிலங்களில் தொடர்ந்து தேடினர். கேரளாவின், காசர்கோடுவை சேர்ந்த அப்துல் சாயில், 25, முகமது ஆசீக், 25, முகமது சிராஜ், 29, தமிழகத்தின், கரூரை சேர்ந்த சக்திவேல், 24, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
இவர்களிடம் ஆம்னி கார், ௧ லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக் பறிமுதல் செய்யப் பட்டது.
