/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாலையில் நின்றிருந்த கார் சக்கரங்கள் திருட்டு
/
சாலையில் நின்றிருந்த கார் சக்கரங்கள் திருட்டு
ADDED : மார் 18, 2025 04:59 AM
பெங்களூரு: சாலையில் நின்றிருந்த காரின் நான்கு டயர்களை, மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
ஹூப்பள்ளியை சேர்ந்த கோவிந்தே கவுடா என்பவர், பணி நிமித்தமாக மார்ச் 15ம் தேதி பெங்களூரு வந்திருந்தார். காந்தி நகரின் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். ஹோட்டல் முன் காரை நிறுத்தி இருந்தார்.
நேற்று முன் தினம் அதிகாலை அங்கு வந்த மர்ம நபர்கள், காரின் நான்கு டயர்களை கழற்றிச் சென்றுள்ளனர்.
காலையில் காரின் டயர்கள் திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த கோவிந்தே கவுடா, உப்பார்பேட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரித்தனர்.
கார் கதவை திறந்து, உள்ளே இருக்கும் பொருட்களை திருடவும் மர்ம நபர்கள் முயற்சித்துள்ளனர். கதவை உடைக்க முடியாததால், அவை தப்பியுள்ளன.