/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிவகுமார் வீட்டின் அருகே போலி பதிவெண் கார் பறிமுதல்
/
சிவகுமார் வீட்டின் அருகே போலி பதிவெண் கார் பறிமுதல்
சிவகுமார் வீட்டின் அருகே போலி பதிவெண் கார் பறிமுதல்
சிவகுமார் வீட்டின் அருகே போலி பதிவெண் கார் பறிமுதல்
ADDED : செப் 13, 2025 04:48 AM

பெங்களூரு: துணை முதல்வர் சிவகுமார் வீட்டின் அருகே, போலி பதிவெண்ணுடன் நின்ற டொயோட்டா பார்ச்சூனர் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூரு சதாசிவநகர் 18வது குறுக்கு தெருவில், துணை முதல்வர் சிவகுமார் வீடு உள்ளது. இவரது வீட்டின் அருகே உள்ள சாலையில், நேற்று முன்தினம் வெள்ளை நிற டொயோட்டா பார்ச்சூனர் கார், நீண்ட நேரமாக நின்றது. இதை கவனித்த போக்குவரத்து போலீசார், காரின் அருகே வந்து பார்த்தனர். காரினுள் யாரும் இல்லை என்பது தெரிந்தது.
காரின் முன்பக்க பலகையில் காரின் பதிவெண் கே.ஏ., 51 எம்.டபிள்யு., 6814 என்று இருந்தது. அந்த நம்பரை வைத்து, கார் யாருடையது என்று, போலீசார் ஆய்வு செய்தபோது, எலக்ட்ரானிக் சிட்டியின் தீபக் என்பவருக்கு சொந்தமானது என்று தெரிந்தது.
அவரை மொபைல் போனில் அழைத்து போலீசார் பேசினர். காரை உடனடியாக எடுத்து செல்லும்படி கூறினர். ஆனால் தீபக், தன் கார் வீட்டின் முன் நிற்பதாக கூறினார். அதிர்ச்சி அடைந்த போலீசார், காரின் பின்பக்க பலகையில் பொருத்தப்பட்டிருந்த வாகன பதிவெண்ணை பார்த்தபோது கே.ஏ., 42 பி 6606 என்று இருந்தது. அந்த எண்ணை வைத்து கார் யாருடையது என்று விசாரித்தனர். அப்போது, ராம்நகரின் மாகடி ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., மஞ்சுநாத் பெயரில் கார் இருப்பது தெரிந்தது. அவரை தொடர்பு கொண்டு போலீசார் கேட்டபோது, 'கார் என்னுடையது தான். காரை கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் கொடுத்து இருந்தேன். என் காரில் எப்படி போலி வாகன பதிவெண் பொருத்தப்பட்டது? துணை முதல்வர் சிவகுமார் வீட்டின் அருகே எப்படி வந்தது என்று தெரியவில்லையே' என்றார்.
காரை ஓட்டி வந்தவர் யார், எப்போது போலி வாகன பதிவெண் மாற்றப்பட்டது என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.