/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ., - எம்.எல்.சி.,க்கள் மீதான வழக்குக்கு தடை
/
பா.ஜ., - எம்.எல்.சி.,க்கள் மீதான வழக்குக்கு தடை
ADDED : ஜூன் 20, 2025 11:30 PM
பெங்களூரு:போராட்டத்தின்போது நகரின் அழகை கெடுத்ததாக, மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி, சி.டி.ரவி உட்பட 12 பேர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கேயை கண்டித்து, மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி, சி.டி.ரவி உட்பட பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின்போது நகரின் அழகை கெடுத்ததாகவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், ஹைகிரவுண்ட் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் வழக்குப் பதிவு செய்து, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணை நடந்து வந்தது. தங்கள் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கும்படி, 12 பேரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார், ''12 பேர் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தார். ஹைகிரவுண்ட் போலீசுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்,'' என்றார்.