/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ராமரை அவமதித்த 2 பேர் மீது வழக்கு
/
ராமரை அவமதித்த 2 பேர் மீது வழக்கு
ADDED : பிப் 13, 2026 05:23 AM
பீதர்: ராமரை அவமதிக்கும் வகையில் பேசிய வீடியோவை, பேஸ்புக்கில் வெளியிட்ட இரண்டு பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.
பீதரின் அட்டகரா கிராமத்தில் வசிப்பவர்கள் ராவ் சூர்யவன்ஷி, 26, ராகுல் கன்ட்ரே, 27. இவர்கள் இருவரும் கடவுள் ராமர், கிருஷ்ணர், மகாத்மா காந்தி ஆகியோரை அவமதிக்கும் வகையில் மராத்தி மொழியில் பேசி, வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டனர்.
வீடியோ வைரலான நிலையில், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி, மெஹ்கர் போலீஸ் நிலையம் முன் ஹிந்து அமைப்பினர் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து மத உணர்வுகளை அவமதித்ததாக கூறி இருவர் மீதும், மெஹ்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரையும் தேடுகின்றனர்.

