தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஆட்டோ டிரைவரை கார் ஏற்றி கொல்ல முயன்ற தனியார் நிறுவன அதிகாரி கைது

 ஆட்டோ டிரைவரை கார் ஏற்றி கொல்ல முயன்ற தனியார் நிறுவன அதிகாரி கைது

 ஆட்டோ டிரைவரை கார் ஏற்றி கொல்ல முயன்ற தனியார் நிறுவன அதிகாரி கைது


ADDED : பிப் 13, 2026 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 05:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹலசூரு: ஆட்டோ டிரைவரை கார் ஏற்றி கொல்ல முயன்ற, தனியார் நிறுவன அதிகாரி கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு புலிகேசிநகரை சேர்ந்தவர் சுரேஷ், 47. தனியார் நிறுவன அதிகாரி. நேற்று முன்தினம் மதியம், டிரினிட்டி சதுக்கம் பகுதியில் காரில் சென்றார்.

காரின் முன் சரக்கு ஆட்டோ ஒன்று சென்றது. வழிகேட்பதற்காக ஹாரன் அடித்தார் சுரேஷ். ஆட்டோவை ஓட்டிய டிரைவர் நஞ்சுண்டா, வலதுபக்கமாக செல்லும்படி சைகை காட்டினார்.

இடதுபக்கமாக ஆட்டோவை முந்தி சென்ற சுரேஷ், நஞ்சுண்டாவை ஆபாசமாக திட்டியுள்ளார். இதனால், காரை துரத்தி சென்ற நஞ்சுண்டா, விமான நிலைய சாலையின் சிக்னல் அருகே காரை மறித்தார்.

காரில் இருந்து இறங்கும்படி சுரேஷிடம் கூறினார். அவர் இறங்க மறுத்ததுடன், காரை முன்னோக்கி இயக்கினார். இதனால், உயிரை காப்பாற்றி கொள்ள, காரின், 'பேனட்' மீது நஞ்சுண்டா தொற்றிக் கொண்டார்.

ஆனாலும், காரை நிறுத்தாமல், சுரேஷ் வேகமாக ஓட்டி சென்றார். இதனை கவனித்த சில ஆட்டோ டிரைவர்கள் காரை நிறுத்தினர். கார் பேனட்டில் தொங்கியபடி நஞ்சுண்டா சென்றதை, சிலர் மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டனர். வீடியோ வைரலான நிலையில், காரை ஓட்டியவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆபாசமாக திட்டியதை கேட்க சென்ற தன்னை, கார் ஏற்றி கொல்ல முயன்றதாக, சுரேஷ் மீது ஹலசூரு போக்குவரத்து போலீசில் நஞ்சுண்டா புகார் அளித்தார். சுரேஷை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us