/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வெளிநாட்டினருக்கு வாடகைக்கு வீடு கொடுத்த 23 பேர் மீது வழக்கு
/
வெளிநாட்டினருக்கு வாடகைக்கு வீடு கொடுத்த 23 பேர் மீது வழக்கு
வெளிநாட்டினருக்கு வாடகைக்கு வீடு கொடுத்த 23 பேர் மீது வழக்கு
வெளிநாட்டினருக்கு வாடகைக்கு வீடு கொடுத்த 23 பேர் மீது வழக்கு
ADDED : செப் 05, 2025 04:54 AM
பெங்களூரு: பெங்களூரில் வெளிநாட்டினருக்கு சட்டவிரோதமாக வீடு வாடகைக்கு கொடுத்த, உரிமையாளர்கள் 23 பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
சுற்றுலா, கல்வி விசாவில் பெங்களூரு வந்து தங்கியிருக்கும் நைஜீரியா, கானா உள்ளிட்ட வெளிநாட்டினர், விசா காலம் முடிந்தும் தங்களது நாடுகளுக்கு திரும்பிச் செல்லாமல், சட்டவிரோதமாக வசிக்கின்றனர்; போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், பெங்களூரு வடகிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட அம்ருதஹள்ளி, பாகலுார், சம்பிகேஹள்ளி, வித்யாரண்யபுரா, கொடிகேஹள்ளி, கொத்தனுார், எலஹங்கா ஆகிய போலீஸ் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும், வெளிநாட்டினர் பற்றி போலீசார் தகவல் சேகரித்தனர்.
நேற்று அதிகாலை 2:00 மணி முதல் காலை 11:00 மணி வரை, ஒன்பது மணி நேரம் தொடர்ந்து, வெளிநாட்டினர் தங்கி இருக்கும் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
விசா காலம் முடிந்து சட்டவிரோதமாக தங்கி இருந்த ஒன்பது வெளிநாட்டு பிரஜைகள் பிடிபட்டனர். அவர்கள், வெளிநாட்டினர் தடுப்பு காவல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வீடு வாடகைக்கு கொடுக்கும்போது, வெளிநாட்டினரை பற்றிய விபரம் அடங்கிய 'சி' படிவத்தை, வீட்டின் உரிமையாளர்கள் போலீஸ் நிலையங்களில் கொடுக்க வேண்டும்.
போலீசார் நடத்திய சோதனையின்போது, வீட்டு உரிமையாளர்கள் 23 பேர், வெளிநாட்டினருக்கு சட்டவிரோதமாக வீட்டை வாடகைக்கு கொடுத்தது தெரிந்தது. அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஒரு வீட்டில் இருந்த 600 கிராம் கோகைன் என்ற போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.