/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறுவனுக்கு சித்ரவதை 9 பேர் மீது வழக்கு
/
சிறுவனுக்கு சித்ரவதை 9 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 07, 2025 08:00 AM
தாவணகெரே : வீடு புகுந்து திருட முயன்றதாக கூறி, நாடோடி சமூக சிறுவனை மரத்தில் கட்டி வைத்து அடித்ததுடன், எறும்பை விட்டு மர்ம உறுப்பில் கடிக்க வைத்த கொடூரம் நடந்து உள்ளது. இதுதொடர்பாக ஒன்பது பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சிறுவன் ஒருவனை மரத்தில் கட்டி வைத்து அடிப்பதுடன், மர்ம உறுப்பில் எறும்பை கடிக்க வைத்து அதை பார்த்து சிலர் சிரிக்கும் வீடியோ, தாவணகெரே போலீசாருக்கு கடந்த 4ம் தேதி கிடைத்தது. வீடியோ அடிப்படையில் போலீசார் விசாரித்தனர். இச்சம்பவம், சன்னகிரி அருகே அஸ்தாபனஹள்ளி கிராமத்தில் நடந்தது தெரியவந்தது.
கொடூர சம்பவத்திற்கு ஆளான சிறுவன், அஸ்தாபனஹள்ளி கிராமத்தின் தர்ஷன் என்பவர் வீட்டில் திருட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் சிறுவனை பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்தனர். மேலும், மர்ம உறுப்பில் கட்டெறும்பை விட்டு கடிக்க வைத்து உள்ளனர். சிறுவன் துடித்ததை பார்த்து அவர்கள் ரசித்து உள்ளனர்.
சிறுவனை கொடுமைப்படுத்திய அஸ்தாபனஹள்ளி கிராமத்தின் சுபாஷ், 23, லக்கி, 21, தர்ஷன், 22, பரசு, 25, சிவதர்ஷன், 23, ஹரிஷ், 25, பட்டிராஜ், 20, பூனி, 18, மதுசூதன், 19 ஆகிய ஒன்பது பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

