பெண்ணை மிரட்டி பலாத்காரம் பா.ஜ., பிரமுகர் மீது வழக்கு
பெண்ணை மிரட்டி பலாத்காரம் பா.ஜ., பிரமுகர் மீது வழக்கு
ADDED : மே 24, 2026 11:30 PM
ஷிவமொக்கா: இன்ஸ்டாகிராம் சமூக ஊடகம் மூலம் பழகிய பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த, பா.ஜ., பிரமுகர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.
ஷிவமொக்கா பத்ராவதி டவுனில் வசிப்பவர், 23 வயது இளம்பெண். இவருக்கு திருமணம் முடிந்து விட்டது.
இன்ஸ்டாகிராம் சமூக ஊடகம் மூலம் இளம்பெண்ணுக்கும், பத்ராவதி தொகுதி பா.ஜ., பிரமுகர் பரத், 26, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
கடந்த, 11ம் தேதி இளம்பெண் வீட்டிற்கு பரத் வந்தார். தனியாக இருந்த இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்தார்.
இதுபற்றி வெளியே சொன்னால் உன்னை பற்றி அவதுாறு பரப்புவேன் என்று மிரட்டிவிட்டு சென்றார்.
இளம்பெண் யாரிடமும் சொல்லவில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி, பாலியல் உறவுக்கு ஒத்துழைக்கும்படி இளம்பெண்ணுக்கு, பரத் தொல்லை கொடுத்தார்.
இதுபற்றி அறிந்த இளம்பெண் கணவர் அளித்த புகாரில், பரத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடுகின்றனர்.
