/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கலெக்டர் குறித்து சர்ச்சை பேச்சு பா.ஜ., கொறடா மீது வழக்கு
/
கலெக்டர் குறித்து சர்ச்சை பேச்சு பா.ஜ., கொறடா மீது வழக்கு
கலெக்டர் குறித்து சர்ச்சை பேச்சு பா.ஜ., கொறடா மீது வழக்கு
கலெக்டர் குறித்து சர்ச்சை பேச்சு பா.ஜ., கொறடா மீது வழக்கு
ADDED : மே 27, 2025 11:46 PM

கலபுரகி : பா.ஜ., திரங்கா யாத்திரையில் பங்கேற்க வந்த மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமியை காங்கிரசார் முற்றுகையிட்ட போது, அரசு விருந்தினர் மாளிகை அறையில் வைக்கப்பட்டார். போலீசார் பாதுகாப்பு அளிக்கவில்லை என்று சலவாதி நாராயணசாமி குற்றம்சாட்டி இருந்தார்.
இது தொடர்பாக, கலபுரகி நடந்த நிகழ்ச்சியில் பேசிய மேல்சபை பா.ஜ., கொறடா ரவிகுமார், 'மாவட்ட கலெக்டர் பவுசியா தரனும், பாகிஸ்தானை சேர்ந்தவரா அல்லது ஐ.ஏ.எஸ்., அதிகாரியா என்று தெரியவில்லை. உங்களின் கரகோஷத்தை பார்த்தால், அவர் பாகிஸ்தானை சேர்ந்தவராக இருப்பார்' என்று பேசியிருந்தார்.
இதற்கு ஆளும் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஷரண் சிரசகியை சேர்ந்த தத்தாத்ரேயா என்பவர், பஜார் போலீஸ் நிலையத்தில், ரவிகுமார் மீது புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இது குறித்து தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியதாவது:
பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாமல், பா.ஜ.,வினருக்கு உண்ட உணவு செரிக்காது. துாங்கும் போதும் கூட, பாகிஸ்தான்... பாகிஸ்தான்... என்று புலம்புவர். மாவட்ட கலெக்டர் குறித்து ரவிகுமார் பேசியது கண்டனத்துக்கு உரியது.
ஐ.ஏ.எஸ்., படித்து நாட்டுக்கு சேவை செய்ய வந்த பவுசியா தரனும், சிறந்த தேர்தல் அதிகாரிக்கான விருதை, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் பெற்றுள்ளார்.
நாட்டுக்கு சேவை செய்வோரை தரக்குறைவாக பேசுவதே பா.ஜ., உறுப்பினர்கள், பணியாக்கி கொண்டனர். நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக பணியாற்றும் ராணுவ வீரர்கள், அதிகாரிகள் குறித்து தவறாக பேசும் பா.ஜ.,வினருக்கு, மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.