தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மத்திய அரசுக்கு எதிராக வீடியோ நபர் மீது வழக்கு

மத்திய அரசுக்கு எதிராக வீடியோ நபர் மீது வழக்கு

மத்திய அரசுக்கு எதிராக வீடியோ நபர் மீது வழக்கு


ADDED : மே 09, 2025 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2025 11:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோலார்: கோலார் மாவட்டம், கும்பாரபேட்டையை சேர்ந்தவர் முனீர் கான், 43. இவர் கோழிக்கறிக் கடை நடத்தி வருகிறார். யு டியூப் சேனலில் வீடியோக்களை பதிவேற்றி வந்தார்.

சமீபத்தில் தன் யு டியூப் சேனலில், பஹல்காம் தாக்குதல் குறித்து முனீர் கான் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், 'இது மத்திய அரசின் திட்டமிட்ட சதி. பீஹார் தேர்தலை மனதில் கொண்டு, ஹிந்துக்களின் ஓட்டுகளை பெறுவதற்கு நடத்தப்பட்டது' என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இது பற்றி அறிந்த, கல்பேட்டை போலீசார், முனீர் மீது, நேற்று பி.என்.எஸ்.எஸ்., சட்டத்தின்படி தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து உள்ளனர். அந்த வீடியோவை யு டியூப் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us