/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பஸ்சில் பெண் பயணியரை திட்டிய கண்டக்டர் மீது வழக்கு
/
பஸ்சில் பெண் பயணியரை திட்டிய கண்டக்டர் மீது வழக்கு
பஸ்சில் பெண் பயணியரை திட்டிய கண்டக்டர் மீது வழக்கு
பஸ்சில் பெண் பயணியரை திட்டிய கண்டக்டர் மீது வழக்கு
ADDED : பிப் 22, 2026 05:22 AM
பெங்களூரு: பி.எம்.டி.சி., பஸ்சில் பெண் பயணியர் அதிகம் இருந்ததால், எரிச்சல் அடைந்த கண்டக்டர், பெண்களை திட்டிய வீ டியோ சமூக வலைதளங் களில் பரவியுள்ளது.
பெங்களூரு தெற்கு மாவட்டத்தின், சென்னப்பட்டணாவில் இருந்து, பி.எம்.டி.சி., பஸ் பெங்களூருக்கு வந்து கொண்டிருந்தது. பஸ்சில் மிக அதிகமான பயணியர் இருந்தனர். கால் வைக்கவும் இடமில்லை. குறிப்பாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர்.
இதைக்கண்டு கடுப்பான கண்டக்டர், 'வீட்டில் உங்களுக்கு வேலை எதுவும் இல்லையா. இலவசமாக பயணிக்கலாம் என்பதால், ஊர், ஊராக சுற்றுகிறீர்களா' என, பஸ்சில் இருந்த பெண்களை பார்த்து கேள்வி எழுப்பினார். இலவச திட்டத்தை செயல்படுத்திய அரசையும், பெண்களையும் தகாத வார்த்தைகளால் திட்டினார்.
கெங்கேரியில் இறங்க வேண்டிய பெண்களை, சிறிது தொலைவு தள்ளி இறக்கி விட்டு வசைபாடினார்.
இதனால், மனம் நொந்த பெண் ஒருவர் கெங்கேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி கண்டக்டர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

