தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கொலை வழக்கில் கைதான எம்.எல்.ஏ., பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைப்பு

 கொலை வழக்கில் கைதான எம்.எல்.ஏ., பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைப்பு

 கொலை வழக்கில் கைதான எம்.எல்.ஏ., பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைப்பு


ADDED : பிப் 22, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2026 05:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ரவுடி சிவகுமார் கொலை வழக்கில் கைதான, பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ், சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

பெங்களூரு பாரதிநகரை சேர்ந்தவர் ரவுடி சிவகுமார் என்ற பிக்லு சிவா, 46. கடந்த ஆண்டு ஜூலை, 15ம் தேதி வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரிக்கும் சி.ஐ.டி., போலீசார், வழக்கின் ஐந்தாவது குற்றவாளியான கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜை, கடந்த, 12ல், பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்தனர்.

மருத்துவ பரிசோதனைக்கு பின், 15ம் தேதி மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்ற நீதிபதி சிவகுமார் முன், அவரை ஆஜர்ப்படுத்தினர். ஏழு நாட்கள் சி.ஐ.டி., காவலில் விசாரிக்க, நீதிபதி அனுமதி அளித்தார்.

இதையடுத்து, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள சி.ஐ.டி., அலுவலகத்தில் எம்.எல்.ஏ.,விடம் ஏழு நாட்களும் விசாரணை நடத்தப்பட்டது. வழக்கின் முதல் குற்றவாளி ஜெகதீஷுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள், அவருடன் பேசிய மொபைல் போன் அழைப்புகளை குறிப்பிட்டு விசாரித்தனர். எனக்கும், ஜெகதீஷுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் யார் என்றே தெரியாது என்று மட்டுமே, பைரதி பசவராஜ் திரும்ப, திரும்ப கூறியுள்ளார்.

இந்நிலையில், நேற்றுடன் அவரது போலீஸ் காவல் முடிந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் மேலும் விசாரிக்க வேண்டி இருப்பதால், மீண்டும் போலீஸ் காவலுக்கு அனுப்பும்படி, சி.ஐ.டி., வக்கீல் அசோக் நாயக் கேட்டுக் கொண்டார்.

இதற்கு எம்.எல்.ஏ., தரப்பு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஏற்கனவே அவர் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் இருந்து விட்டார். அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவருக்கு உடல் நல பிரச்னை உள்ளது என்று வாதிட்டார்.

சி.ஐ.டி., காவலில் இருந்த போது, எம்.எல்.ஏ.,க்கு எந்த உடல்நல பிரச்னையும் இல்லை என்று அரசு தரப்பு வாதிட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிவகுமார், பைரதி பசவராஜை, வரும் 26ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் பரப்பன அக்ரஹாரா சிறையில் போலீசார் அடைத்தனர். இதற்கிடையில் வீட்டு சாப்பாடு வழங்க கோரி, பைரதி பசவராஜ் தாக்கல் செய்த மனுவையும், நீதிபதி தள்ளுபடி செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us