/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.1.30 கோடி மோசடி தம்பதி மீது வழக்கு
/
ரூ.1.30 கோடி மோசடி தம்பதி மீது வழக்கு
ADDED : மே 07, 2025 11:43 PM
அன்னபூர்னேஸ்வரி நகர்: இஸ்ரோவில் வேலை வாங்கித் தருவதாக வாலிபரிடம் 1.30 கோடி ரூபாய் மோசடி செய்த, தம்பதி மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
பெங்களூரு, அன்னபூர்னேஸ்வரி நகரில் வசிப்பவர் நீரஜ்குமார், 28. கிராபிக் டிசைனர் படித்துள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் லக்கரேயில் வசிக்கும் பிரபாகர், அவரது மனைவி வினுதாவின் அறிமுகம் கிடைத்தது.
இஸ்ரோவில் வேலை செய்யும், நிறைய பேரை தங்களுக்கு தெரியும். அங்கு கிராபிக் டிசைனர் வேலை வாங்கித் தருவதாக, நீரஜ்குமாரிடம், தம்பதி கூறினர்.
இதை நம்பிய நீரஜ்குமார் வேலைக்காக, முதலில் 30 லட்சம் ரூபாய் கொடுத்தார். அதன் பின் பல தவணைகளில், நீரஜ்குமாரிடம் இருந்து மேலும் 1 கோடி ரூபாயை தம்பதி வாங்கினர்.
கடந்த ஜனவரி மாதம் இஸ்ரோ அலுவலகத்திற்கு நீரஜ்குமாரை அழைத்துச் சென்று, ஒரு சிலரை சந்திக்க வைத்தனர். இதனால் தனக்கு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் நீரஜ்குமார் இருந்தார்.
இம்மாதம் 1ம் தேதி முதல் பணிக்கு சேர்ந்து விடலாம் என்று நீரஜ்குமாரிடம், தம்பதி கூறி இருந்தனர். ஆனால் வேலைக்கு சேர்வதற்காக பணி நியமன ஆணை அவருக்கு வரவில்லை.
இதுபற்றி கேட்டபோது தம்பதி சரியாக பதில் சொல்லவில்லை. தன்னை ஏமாற்றி 1.30 கோடி ரூபாய் மோசடி செய்தது நீரஜ்குமாருக்கு தெரிந்தது. நேற்று முன்தினம் அன்னபூர்னேஸ்வரி நகர் போலீசில் புகார் செய்தார். தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.