ரூ. 3.50 லட்சம் மோசடி செய்த தந்தை - மகன் மீது வழக்கு
ரூ. 3.50 லட்சம் மோசடி செய்த தந்தை - மகன் மீது வழக்கு
ADDED : பிப் 23, 2026 04:44 AM
துமகூரு: உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பெயரை பயன்படுத்தி, அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் 3.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த, தந்தை - மகன் மீது வழக்குப் பதிவானது.
துமகூரு மாவட்டம் குப்பி டவுனை சேர்ந்தவர் லாவண்யா, 37. துமகூரில் கார் ஷோரூமில் ஊழியராக பணியாற்றுகிறார்.
இங்கு பணியாற்றும், துமகூரு அருகே கொடிதிம்மனஹள்ளி கிராமத்தின் பிரவீன் குமார், 35, லாவண்யாவுடன் நட்பாக பழகினார்.
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் எங்கள் உறவினர். நானும், எனது தந்தை ரங்கப்பாவும் கூறினால், உங்களுக்கு அரசு வேலை கிடைக்கும் என்று லாவண்யாவுக்கு, பிரவீன் குமார் ஆசை வார்த்தை காட்டினார்.
இதனை நம்பிய லாவண்யாவும் அரசு வேலைக்காக 3.50 லட்சம் ரூபாயை பிரவீன் குமார், அவரது தந்தை ரங்கப்பாவிடம் கடந்த 2023ல் கொடுத்தார். ஆனால் தற்போது வரை லாவண்யாவுக்கு அரசு வேலை கிடைக்கவில்லை.
பணத்தை திரும்ப கொடுக்காமல் தந்தை, மகன் மோசடி செய்தனர். இதுபற்றி நேற்று முன்தினம் துமகூரு ரூரல் போலீசில் லாவண்யா புகார் செய்தார். தந்தை - மகன் மீது வழக்குப் பதிவானது. தலைமறைவாக உள்ளவர்களை போலீஸ் தேடுகிறது.
