/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மனைவி மூக்கை கடித்த கணவர் மீது வழக்கு
/
மனைவி மூக்கை கடித்த கணவர் மீது வழக்கு
ADDED : ஜூலை 11, 2025 11:01 PM
தாவணகெரே: கடன் விஷயத்தில் தம்பதிக்கிடையே ஏற்பட்ட மோதலில், மனைவியின் மூக்கை கடித்து குதறிய கணவர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.
தாவணகெரே மாவட்டம், சென்னகிரி தாலுகாவின், மன்டரகட்டா கிராமத்தில் வசிப்பவர் விஜய், 35. இவரது மனைவி வித்யா, 30. நிதி நிறுவனத்தில் விஜய் கடன் பெற்றுள்ளார்.
இதன் தவணையை சரியாக கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டது.
மூன்று நாட்களுக்கு முன்பு, வழக்கம் போல் இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. அப்போது விஜய், தன் மனைவி வித்யாவை திட்டி, தாக்கினார்.
கீழே விழுந்த மனைவியின் மூக்கை பலமாக கடித்ததில், அதன் முன் பகுதி துண்டானது. அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் வந்து, தம்பதியின் சண்டையை விலக்கி, வித்யாவை சென்னகிரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, ஷிவமொக்காவின், மெக்கான் மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தற்போது சிகிச்சையில் உள்ள வித்யா, தன்னை தாக்கி இம்சித்த கணவர் மீது, சென்னகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இதன்படி விஜய் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.