/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சர்ச்சைக்குரிய வகையில் பேச்சு கல்லட்கா பிரபாகர் மீது வழக்கு
/
சர்ச்சைக்குரிய வகையில் பேச்சு கல்லட்கா பிரபாகர் மீது வழக்கு
சர்ச்சைக்குரிய வகையில் பேச்சு கல்லட்கா பிரபாகர் மீது வழக்கு
சர்ச்சைக்குரிய வகையில் பேச்சு கல்லட்கா பிரபாகர் மீது வழக்கு
ADDED : ஜூன் 02, 2025 10:23 PM

தட்சிண கன்னடா: ஆட்சேபனைக்குரிய வகையில் பேசியதாக ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் கல்லட்கா பிரபாகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் பஜ்ரங்தள் பிரமுகர் சுகாஸ் ஷெட்டி படுகொலை செய்யப்பட்டார். மே 12ல் நடந்த இரங்கல் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் கல்லட்கா பிரபாகர் பட், ஆட்சேபனைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்தது.
அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுவோர் மீது, தயவு தாட்சண்யமின்றி கிரிமினல் வழக்கு பதிவு செய்யும்படி, போலீசாருக்கு முதல்வர் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, கல்லட்கா பிரபாகர் பட் பேசிய 12 நாட்களுக்கு பின், அவர் மீது பன்ட்வால் ரூரல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அது மட்டுமின்றி பல தலைவர்களின் வீடுகளில் போலீசார் திடீரென சோதனை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடபா போலீஸ் நிலையம் முன், ஹிந்து அமைப்பினர் நேற்று முன்தினம் இரவு தர்ணா செய்தனர்.
உரிய அனுமதியின்றி, தர்ணாவில் ஈடுபட்டதாக 17 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பாக, எஸ்.பி., அருண் நேற்று கூறியதாவது:
தட்சிண கன்னடா மாவட்டத்தின் மங்களூரில் நிகழ்ந்த கொலை சம்பவங்களால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. வகுப்புவாத அமைப்பு தலைவர்களின் பட்டியலை தயாரித்து, அவர்களின் செயல்பாட்டை கண்காணித்து வருகிறோம்.
கடபா போலீஸ் நிலையம் முன் சட்டவிரோதமாக கூடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போராட்டத்தின்போது, தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் அழைத்து வருவோம் என்று கூறியுள்ளனர். அவ்வாறு வந்தால் அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.