/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அனுமதியின்றி ஆழ்துளை கிணறு நில உரிமையாளர்கள் மீது வழக்கு
/
அனுமதியின்றி ஆழ்துளை கிணறு நில உரிமையாளர்கள் மீது வழக்கு
அனுமதியின்றி ஆழ்துளை கிணறு நில உரிமையாளர்கள் மீது வழக்கு
அனுமதியின்றி ஆழ்துளை கிணறு நில உரிமையாளர்கள் மீது வழக்கு
ADDED : பிப் 01, 2026 05:08 AM
ஒயிட்பீல்டு: அனுமதியின்றி ஆழ்துளை கிணறு தோண்டியதற்காக, நிலத்தின் உரிமையாளர்கள் மற்றும் இயந்திர உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரில் நிலத்தடி நீரை பாதுகாப்பதற்காக, அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் தோண்டக்கூடாது என, சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டத்தை மீறி செயல்படுவோர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும்.
இந்நிலையில்,ஒயிட்பீல்டில் முன் அனுமதியின்றி ஆழ்துளை கிணறு தோண்டப்படுவதாக, பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ததில், உரிய அனுமதி பெறாமல், சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறு தோண்டுவது உறுதியானது.
இதையடுத்து, பெங்களூரு குடிநீர் வாரிய அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி,ஒயிட்பீல்டு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கில், நிலத்தின் உரிமையாளர்கள் கலைவாணி, பிரதீப் சவுத்ரி மற்றும் ஆழ்துளை கிணறு தோண்டும் இயந்திரத்தின் உரிமையாளர் பாஸ்கர் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

