ஆன்மிகம்
தைப்பூசம்
தைப்பூசத்தை ஒட்டி, சபரி அய்யப்பன் பஜனை சபா சார்பில் வள்ளி தேவசேனை பஜனை மண்டலியின் திருவருட்பா பாராயணம் - காலை 10:30 முதல் மதியம் 12:30 மணி வரை; தைப்பூச ஜோதி தரிசனம், மஹாமங்களாரத்தி, அன்னதானம் - மதியம் 12:30 மணி; சபா உறுப்பிர்கள், பக்தர்களின் பஜனை - இரவு 7:30 முதல் 8:30 மணி வரை; தைப்பூச ஜோதி தரிசனம், மஹாமங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - இரவு 8:30 மணி. இடம்: ஸ்ரீசங்கரநாராயணசபா, சிவன் ஷெட்டி கார்டன், பெங்களூரு.
மஹா அபிஷேகம், ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு ஆராதணை - காலை 7:00 மணி; ஸ்ரீராமலிங்க சுவாமிகள் அகவல் பாராயணம் - 9:00 மணி; ஸ்ரீராமலிங்க சுவாமிகள் ஜோதி தரிசனம் - 11:00 மணி; அன்னதானம்- மதியம் 12:00 மணி; ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், ஆதிராவின் 'கந்தபுராணம்' சொற்பொழிவு - மாலை 6:30 மணி. இடம்: மகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம், ஹலசூரு.
ஜெயஜீவன் நகர் மாரியம்மன் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் புறப்பாடு - காலை 8:00 மணி; சுப்பிரமணிய சுவாமிக்கும், சிவனுக்கும் அபிஷேகம் - 9:30 மணி; மஹா மங்களாரத்தி - 11:00 மணி; அன்னபிரசாதம் - மதியம் 12:00 மணி. இடம்: ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், சிக்க பானஸ்வாடி, பெங்களூரு.
தைப்பூச திருவிழா - காலை 11:00 மணி; அலகு, காவடி எடுப்பவர்கள் கோவிலில் இருந்து ஊர்வலம் புறப்பாடு - 11:30 மணி; அன்னதானம் - மதியம் 1:00 மணி. இடம்: ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், பழைய மெட்ராஸ் சாலை, ஹலசூரு.
கோவில் திறப்பு - காலை 7:30 மணி; காவல்பைரசந்திரா என்.பி., சாலையில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து 350 பால்குட ஊர்வலம் புறப்பாடு - காலை 10:30 மணி; விநாயகர் முருகர், வள்ளி, |தெய்வானைக்கு பால்குட அபிேஷகம், மஞ்சள், சந்தனம், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், கரும்பு சாறு, நாட்டு சர்க்கரை உட்பட மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகம் - 11:30 மணி. இடம்: தங்கமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், தொட்டண்ணா நகர், காவல்பைரசந்திரா.
முருகருக்கு அபிேஷகம் - காலை 10:30 மணி, நடராஜருக்கு சிறப்பு பூஜை - காலை 11:00 மணி, மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - 12:00 மணி, இடம்: ஸ்ரீகாசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜிநகர்.
பாலதண்டாயுதபாணிக்கு ராஜ அலங்காரம் -- காலை 9:30 மணி; வள்ளி தெய்வானை சமேத முருக பிரகார உற்சவம் -- மதியம் 12:00 மணி; மஹா மங்களாரத்தி, அன்னதானம் -- மதியம் 12:30 மணி முதல். இடம்: தண்டபாணி ஞான மந்திரா, ஆறாவது பிளாக், ராஜாஜி நகர்.
பால் அபிஷேகம், ஆராதனை, சுவாமி அலங்காரம், தீபாராதனை, பிரசாத வினியோகம்- காலை 7:30 மணி முதல். இடம்: பொன்மலை முருகன் கோவில், பெமல்நகர், தங்கவயல்.
பஞ்சாமிர்த அபிஷேகம், சந்தன அலங்காரம், அர்ச்சனை, கந்த சஷ்டி கவசம் பாராயணம், மஹா தீபாராதனை, பிரசாத விநியோகம்- - காலை 8:00 மணி முதல். இடம்: பால தண்டாயுதபாணி கோவில், உரிகம் பேட்டை, தங்கவயல்.
பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், திருமுருக பக்திப் பாடல்கள் ஒலிபரப்புதல், மஹா தீபாராதனை, பிரசாத விநியோகம் -- காலை 8:00 மணி முதல். இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், அம்பேத்கர் சாலை, என்.டி., பிளாக், உரிகம், தங்கவயல்.
பஞ்சாமிர்த அபிஷேகம், சிறப்பு அலங்காரம், நேர்த்திக் கடன், காவடி செலுத்துதல், மஹா மங்களாரத்தி, பிரசாத விநியோகம்- - காலை 9:00 மணி முதல். இடம்: சுப்ரமணிய சுவாமி கோவில், எலக்ட்ரிக்கல் காலனி, டாப் லைன், உரிகம், தங்கவயல்.
அபிஷேகம், சிறப்பு அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை, பிரசாத விநியோகம்- - காலை 10:00 மணி முதல். இடம்: முருகர் கோவில், கணேஷ்புரம், ராபர்ட்சன்பேட்டை.
புத்த பவுர்ணமி
திரிசரணம், பஞ்சசீலம் ஓதுதல், தியானம், -புத்தர் அறநெறி உரை நிகழ்ச்சி, காலை:10-00 மணி; இடம்: அசோக தம்ம துாத, மகா போதி சங்கம், பி.எம்.சாலை, கவுதம் நகர், தங்கவயல்.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பெருவிழா
லுார்து அன்னை பெருவிழாவை ஒட்டி, தமிழில் திருப்பலி - காலை 6:00, 8:00 மணி; கன்னடத்தில் திருப்பலி - 7:00 மணி; மலையாளத்தில் திருப்பலி - 8:00 மணி; ஆங்கிலத்தில் திருப்பலி - 9:15 மணி; முதல் திருவிருந்து திருப்பலி - 10:30 மணி; ஜெபமாலை, கன்னட திருப்பலி - மாலை 5:30 மணி; தமிழில் திருப்பலி, ஜெபமாலை - இரவு 7:00 மணி. இடம்: லுார்து அன்னை தேவாலயம், ஹலசூரு, பெங்களூரு.
பொது
பொங்கல் விழா
நிமான்ஸ் தமிழ் நண்பர்கள் குழுமம் சார்பில் ஆறாம் ஆண்டு நம்ம வீட்டு விழா பொங்கல் விழா - காலை 10:30 முதல். இடம்: நிமான்ஸ் ஜிம்கானா, பெங்களூரு.
அக்ரி வாக்
கர்நாடக வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்காகவும், எதிர்கால விவசாயத்துக்காகவும் 'அக்ர வாக்' - காலை 6:30 மணி. இடம்: பேண்ட் ஸ்டாண்ட், கப்பன் பூங்கா, பெங்களூரு.
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி
இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
இசை
கன்னடா மற்றும் இந்தி ஜாமிங் - மாலை 6:00 முதல் 8:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.
வைல்டு டே - இரவு 9:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: கின்சா கிளப் கோரமங்களா, 27, நான்காவது குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
ஜென் சி திவா - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: வேப்பர் இந்திரா நகர், 773, 100 அடி சாலை, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.
லேடிஸ் நைட் - இரவு 8:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு கிளப், இரண்டாவது தளம், அல்லய்டு கிராண்ட் பிளாசா, மக்ரத் சாலை, அசோக் நகர்.
காமெடி
டில்லி வெர்சஸ் பெங்களூரு - இரவு 8:30 முதல் 9:30 மணி வரை. இடம்: டேக் காமெடி கிளப், 80 அடி சாலை, எஸ்.டி.பெட், நான்காவது பிளாக், கோரமங்களா.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:20 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1,018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

